Sunday, 15 September 2013

அகமுடையார் வரலாறு

அகமுடையார் வரலாறு
Aandiyappathevar.jpg Valivalamdesikar.jpg ]]Manikanayakar.jpg Pachaiyappamudaliar.jpg Naadimuthupillai.jpg Narayanasamiagampadiyar.jpg  MarudhuStamp.jpg

தமிழகத்தின் அனைத்து பகுதியிகளிலும் அகமுடையார் இனத்தினர் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றனர்.தென் தமிழகத்தில் அகமுடையார்களை முக்குலத்தோர் பிரிவுகளில் ஒன்றாகவும் கருதி வருகின்றனர். வட தமிழகத்தை பொருத்தவரையிலும் அகமுடையார் இனத்தினர் தனித்தே அடையாளப்பட்டு வருகின்றனர்.பெரும்பாலும் அகமுடையார் இனத்தினரின் பட்டங்களையும்,பட்ட பெயர்களையும் வைத்து பலவாறு தமிழகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்றனர்.தென் தமிழகத்தில் அகமுடையார்களை சேர்வை என்றும் மேலும் முதலியார்,பிள்ளை என்ற பட்டங்களுடன் வட தமிழகத்திலும், தேவர்,பிள்ளை,அதிகாரி,நாயக்கர்,தேசிகர் போன்ற பல பட்ட பெயர்களுடன் மத்திய தமிழகத்திலும் அறியபடுகின்றனர்.

மக்கள்தொகை :

சுமார் ஒன்றரை கோடி பேருக்கும் மேற்பட்ட மக்கள்[சான்று தேவை]தமிழகம் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திர,கேரளா உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும் பலவேறு பட்டப்பெயர்களுடன் வசித்து வருகின்றனர்.மேலும் இலங்கை,மலேசியா,பர்மா,சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும்பாலானோர் பல தலைமுறைகளாக பூர்வீகமாக வசித்து வருகின்றனர்.

அகமுடையார் குல பிரிவுகள் :

  1. ராஜகுலம்
  2. கோட்டைப்பற்று (பதினெட்டு கோட்டைப்பற்று)
  3. இரும்புத்தலை
  4. ஐவளிநாடு
  5. நாட்டுமங்களம்
  6. ராஜபோஜ
  7. ராஜவாசல்
  8. கலியன்
  9. சனி
  10. மலைநாடு

அகமுடையார் குல பட்டங்கள் :

  1. அகமுடைய தேவர்
  2. அகமுடைய சேர்வை
  3. அகமுடைய பிள்ளை
  4. அகமுடைய தேசிகர்
  5. அகமுடைய முதலியார்
  6. அகமுடைய வேளாளர் (துளுவ வேளாளர்)
  7. அகமுடைய உடையார்
  8. அகமுடைய அதிகாரி
  9. அகமுடைய மணியக்காரர்
  10. அகமுடைய பல்லவராயர்
  11. அகமுடைய நாயக்கர்
  12. அகமுடைய செட்டியார்
  13. அகமுடைய கவுண்டர்
  14. அகமுடைய ரெட்டியார்
  15. அகமுடைய ராவ்
அகமுடைய தேவர்:
 
தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம்,கோயம்புத்தூர்,திண்டுக்கல்,திருப்பூர்,விருதுநகர்,திருநெல்வேலி,மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தேவர் என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.
அகமுடைய சேர்வை:
 
ராமநாதபுரம்,சிவகங்கை,மதுரை,தேனி,திண்டுக்கல்,புதுக்கோட்டை,விருதுநகர்,திருநெல்வேலி,தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சேர்வை என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.
அகமுடைய முதலியார் மற்றும் துளுவ வேளாளர்,உடையார்:
 
காஞ்சிபுரம்,வேலூர்,திருவண்ணாமலை,விழுப்புரம்,கடலூர்,சென்னை,பெரம்பலூர்,சேலம்,கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் முதலியார்,துளுவ வேளாளர் என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.

அரசியல் பங்களிப்பாளர்கள் :

  • திரு. வை.நாடிமுத்து பிள்ளை (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – பட்டுக்கோட்டை
  • திரு. ப.உ.சண்முகம் (முன்னாள் அமைச்சர்) – திருவண்ணாமலை
  • திரு. க.ராஜாராம் (முன்னாள் அமைச்சர் & சபாநாயகர்) – பனைமரத்துபட்டி,சேலம்
  • திரு. டி.ராமசாமி (முன்னாள் அமைச்சர்) – ராமநாதபுரம்
  • திரு. தா.கிருட்டிணன் (முன்னாள் அமைச்சர்) – மதுரை
  • திரு. பொன்.முத்துராமலிங்கம் (முன்னாள் அமைச்சர்) – மதுரை
  • திரு. டாக்டர் கோ.சமரசம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – காவேரிப்பட்டினம்,வேலூர்(மா)
  • திரு. ஆர்.ஜீவரத்தினம் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) – அரக்கோணம்,வேலூர்(மா)
  • திரு. ஜெயமோகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) – திருப்பத்தூர்,வேலூர்(மா)
  • திரு. பாண்டுரங்கன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – கலசபாக்கம்,திருவண்ணாமலை(மா)
  • திரு. ஆர்.சண்முகம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – திருத்தணி
  • திரு. வி.எம்.தேவராஜ் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – வேலூர்
  • திரு. வி.மாரிமுத்து (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – நாகப்பட்டினம்
  • திரு. பி.வி.ராஜேந்திரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) – வேதாரண்யம்
  • திரு. வி.என்.சுவாமிநாதன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) – பட்டுக்கோட்டை
  • திருமதி.பவானி ராஜேந்திரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) – இராமநாதபுரம்
  • திரு. கோ.சி.மணி (முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர்) – ஆடுதுறை,கும்பகோணம்
  • திரு. டி.ஆர்.பாலு (முன்னாள் மத்திய அமைச்சர் & நாடாளமன்ற உறுப்பினர்) – வடசேரி,தஞ்சாவூர்
  • திரு. பொன்முடி (உயர்கல்வித்துறை அமைச்சர்) – விழுப்புரம்
  • திரு. ஆர்.ரெங்கராஜன் (சட்டமன்ற உறுப்பினர்) – பட்டுகோட்டை
  • திரு. ஒ.எஸ்.மணியன் (நாடாளுமன்ற உறுப்பினர்) – வேதாரண்யம்
  • திரு. அக்ரி கிருஷ்ணமூர்த்தி (உணவுத்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்) – கலசபாக்கம்
  • திரு. ஞானசேகரன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – வேலூர்
  • திருமதி. லதா அதியமான் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – திருமங்கலம்,மதுரை
  • திரு.குணசேகரன் (சட்டமன்ற உறுப்பினர்) – சிவகங்கை
  • திரு.டி.கே.எஸ்.இளங்கோவன் (நாடாளுமன்ற உறுப்பினர்) – சென்னை
  • திரு.என்.வி.காமராஜ் (நாடாளுமன்ற உறுப்பினர்) – வேதாரண்யம்
  • திரு.Dr. வி.எஸ்.விஜய் (மருத்துவத்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்) – வேலூர்
  • திரு.டி.ஆர்.பி.ராஜா (சட்டமன்ற உறுப்பினர்) – மன்னார்குடி
  • திரு.முத்துகுமரன் (சட்டமன்ற உறுப்பினர்) – புதுக்கோட்டை
  • திரு.ஜெ.சுதா லட்சுமிகாந்தன் (சட்டமன்ற உறுப்பினர்) – போளூர்
  • திரு.பா.மோகன் (சட்டமன்ற உறுப்பினர்) – சங்கராபுரம்
  • திரு.இரா.குமரகுரு (சட்டமன்ற உறுப்பினர்) – உளுந்தூர்பேட்டை

ஆன்மிகம் :

  • நந்தி தேவர்
  • வல்லபசித்தர் என்னும் சுந்தரானந்தர்
  • கருவூரார்
  • பாம்பன் சுவாமிகள்
  • அருணகிரிநாதர் என்னும் செம்மலை அண்ணல் அடிகளார்
  • சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள்

மொழி :

  • கரந்தை த.வே.உமாமகேஸ்வரன் பிள்ளை
  • சி.இலக்குவனார்
  • காவேரிபாக்கம் நவச்சிவாய முதலியார்
  • ஆரணி குப்புசாமி முதலியார்

இலக்கியம் :

  • இளங்கோவடிகள்
  • கவிஞர் புலமை பித்தன்
  • கவிஞர் முத்துலிங்கம்
  • குருவிக்கரம்பை சண்முகம்
  • பட்டுக்கோட்டை குமரவேலு
  • தேனி. பொன்.கணேஷ் (ஆன்மிக எழுத்தாளர்)

நாடகம் :

  • பம்மல்.கே.சம்பந்தம் முதலியார்
  • சங்கிலியா பிள்ளை

திரைப்படத் துறை :

  • பி.யு.சின்னப்பா பாகவதர் (நடிகர்)
  • எஸ்.எஸ்.இராஜேந்திரன் (நடிகர்)
  • சாண்டோ சின்னப்பா தேவர் (நடிகர்,தயாரிப்பாளர்)
  • எஸ்.எஸ்.சந்திரன் (நடிகர்)
  • சங்கிலி முருகன் (நடிகர்,தயாரிப்பாளர்)
  • கோவி.மணிசேகரன் (இயக்குனர்,திரைக்கதையாசிரியர்)
  • விவேக் (நடிகர்)
  • எம்.எஸ்.பாஸ்கர் (நடிகர்)
  • தேங்காய் சீனிவாசன் (நடிகர்)
  • கே.எஸ்.ரவிக்குமார் (இயக்குனர்)
  • சிவநாராயண மூர்த்தி (நடிகர்)
  • வசந்தபாலன் (இயக்குனர்: வெயில்,அங்காடித்தெரு)
  • கலைப்புலி தாணு (தயாரிப்பாளர்)
  • சிம்புதேவன் (இயக்குனர்: இம்சை அரசன் 23ம் புலிகேசி,)
  • எஸ்.பி.ஜெனநாதன் (இயக்குனர்: இயற்கை,ஈ,பேராண்மை )
  • ஜீவா (இயக்குனர்: 12B,உன்னாலே உன்னாலே,தாம் தூம்)
அகமுடைய முதலியார் :
 
கி.பி. 13-ம் நூற்றாண்டில் அகமுடைய முதலியார்கள் என்று முதலியார் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். இதே நூற்றாண்டில் முதலியார்களின் அலுவலகங்கள் குலத்தூர் , திருவண்டலூர் ஆகிய இடங்களில் பல்லவராயர் எனும் அரசரால் நிறுவப்பட்டது. தற்போது இது வட தமிழ்நாடாக உள்ளது.
ஆர்காடு , துலுவா வெள்ளாளர் முதலியார்கள் :
 
அகமுடையர் பிற்காலத்தில் முக்குலத்தோர் என்று அழைக்கப்பட்டனர். இந்த வகுப்பில் கல்லர் மற்றும் மறவர் என்ற உட்பிரிவுகளை உள்ளடக்கியதாகும். இந்த மூன்று சமுக இனத்தவரும் முக்குலத்தோர் என்று கடைசியாக அழைக்கப்பட்டனர். அகமுடையார்கள் பின்னர் வட தமிழ்நாடு முழுவதும் பரவினர். இவர்கள் தங்களது பிரிவை துலுவ வெள்ளாலர் என்று மாற்றி அமைத்துக்கொண்டனர். எனவே துலுவ வெள்ளாலர்கள் என்பவர்கள் பொதுவாக தங்களது சமுகத்தின் பெயரை மாற்றிக்கொண்டுள்ளனர்.
 இவர்கள் இதனை அரசு முலம் பதிவு செய்து நடைமுறையில் கொண்டு வந்துள்ளனர். இவ்வாறான கலப்பு இனங்கள் இரண்டு சமுகன்ங்களுக்கு இடையில் பல மாறுதல்களுடன் உருமாறியுள்ளது இதற்கு எந்த விதமான வரலாற்று குறிப்புகள் மற்றும் ஆதாரங்களும் இல்லை. எனவே அகமுடையார்கள் தங்களது சமுகத்தை துலுவ வெள்ளாலர்கள் என்று மாற்றிக்கொண்டனர்.
 முற்காலத்தில் அதாவது 13-வது நூற்றாண்டில் அகமுடையார்கள் முதலியார்கள் என்றே அழைக்கப்பட்டனர் இவ்வாறான தகவல்கள் 23 மற்றும் 25 ஆம் நூற்றாண்டில் திருவலூந்தூர் நாட்டில் உள்ள ராஜ ராஜ ஜஸ்வரய படையார் திருக்கோவில் கல்வெட்டில் சோழக்கன் பல்லவராயர் அவர்களால் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
துலுவ வெள்ளாலர், துலுவ அல்லது துலுமர் என்ற உட்பிரிவுகளாக தெற்கு கண்ணட நாட்டில் துலு நாடு எனும் நாட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இன்று தொண்டை மண்டலத்தில் வாழும் துலுவ வெள்ளாலர் சமுகத்தினர் ஆதொண்டை சக்கரவர்தியால் உருவாக்கப்பட்டனர். குரும்பர்களை வென்ற பின்னர் வடதமிழ்னாட்டில் இவர்களது ஆட்சி பரவியது . இவர் தனது கொள்களை வட வடதமிழ்னாட்டில் பரப்பியுள்ளார் . குரும்பர்களை வென்ற பின்னரே வடதமிழ்னாட்டில் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. இந்த குறிப்பு ஸ்ரீசைலம் எனும் ஊரில் ஆதொண்டை சக்கரவர்த்தியால் கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது

வீரமங்கை ராணி வேலு நாச்சியார்

வீரமங்கை வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்.
இளமை
1730லஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி – சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகவாக பிறந்தார் வேலுநாச்சியார். எனினும் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார்; பல மொழிகள் கற்றார். 1746ல் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதருக்கு மனைவியானார்.

ஆங்கிலேயர் படையெடுப்பு

1772ல் ஐரோப்பியரின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார் வேலுநாச்சியார். இந்த படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் அவர்கள் விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்பு பற்றி பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர்அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் முயற்சியினால் சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசியதன் மூலம் வீரமிக்க விடுதலைப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. மருது சகோதரர்கள் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

 ஆங்கிலேயர்களின் சட்டதிருத்தம்

ஆண் வாரிசு இல்லாமல் உள்ள நாட்டை (அரசாங்கத்தை) தாமே எடுத்து நடத்தலாம் என்று ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் சட்ட படி புதிய முறை தோற்றுவிக்கப் பட்டது.அதன் பின்பு, சிவகங்கையின் ஆட்சி அதிகாரத்தை காக்கும் பொறுப்பில் இருந்த மருது சகோதர்களே ஆட்சியை கைப்பற்றி இருபது வருடங்கள் சிறப்பாக ஆட்சி நடத்தினர்.மேலும், தங்களது இறப்பு வரையிலும் சிவகங்கையை சியரபான கட்டமைப்போடு ஆண்டு வந்தனர் என்பது இங்கே குறிப்பிடதக்கது.

படை திரட்டல்

1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுத்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டையார் ‘காளியம்மாள்’ என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது தலைமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார்.

 இறுதி நாட்கள்

1790-ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார். 1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் 25 டிசம்பர் 1796 அன்று இறந்தார். இதன் தொடர்ச்சியாக இன்று வரை சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்த மன்னர்களின் பட்டியல் கீழே உள்ளது.
சிவகங்கைச் சீமை பதவி வகித்த மன்னர்கள்
1. 1728 – 1749 – முத்து வீஜயரகுநாத உ. சசிவர்ணத்தேவர்
2. 1749 – 1772 – சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்
3. 1780 – 1783 – வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்
4. 1783 – 1801 – மருது பாண்டியர்கள் – பெரிய மருது (எ) வெள்ளை மருது மற்றும் சின்ன மருது
5. 1801 – 1829 – கெளரிவல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின் தத்து மைந்தன்
6. 1829 – 1831 – உ.முத்துவடுகநாதத்வேர்
7. 1831 – 1841 – மு. போதகுருசாமித்தேவர்
8. 1841 – 1848 – போ. உடையணத்தேவர்
9. 1848 – 1863 – மு.போதகுருசாமித்தேவர்
10. 1863 – 1877 – ராணி காதமநாச்சியார் போதகுருசாமி
11. 1877 – முத்துவடுகநாதத்தேவர்
12. 1878 – 1883 – துரைசிங்கராஜா
13. 1883 – 1898 – து. உடையணராஜா
14. 1898 – 1941 – தி. துரைசிங்கராஜா
15. 1941 – 1963 – து. சண்முகராஜா
16. 1963 – 1985 – து.ச.கார்த்தகேயவெங்கடாஜலபதி ராஜா
17. 1986 – முதல் ராணி டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார்.

முக்குலத்து வீரன் அழகு முத்துக்கோன் சேர்வை

(இந்த பதிவு நீண்ட பெரிய பதிவாக இருக்கலாம்.ஆனால், இங்கே சொல்லப்பட்டு இருக்கிற அனைத்து கருத்
துகளும் மிக அரிய தகவல்கள்,அதனால்தான் எங்களால் எதையும் சுருக்கி பதிவேற்ற முடியவில்லை.காலம் கருதாமல் பொறுமையாக படித்து உணரவும் மறைக்கப்படும் வரலாற்று உண்மைகளை.
கோயில் = கோ+இல்; கோ – அரசு , இல் – இல்லம். அதுபோல, கோன் என்பது அரசன் என்ற பதத்தை குறிக்கும் சொல்.அழகு முத்து கோன் என்ற முக்குலத்து மாவீரனை கோனாராக்கி வேடிக்கை பார்ப்பதை உங்களுக்கு அறிய தரவே இந்த பதிவு. ) தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய முக்குலத்து மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை, அவனது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி, பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது.
அவனைப் போலவே கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளோடு அவனது ஆறு துணைத் தளபதிகளும் 248 வீரர்களும் நிறுத்தப்பட்டார்கள். எங்களை எதிர்ப்போர்க்கு இதுதான் கதி என்று கும்பினிப்படை எக்காளமிட்டபடி அவர்களை சுற்றிச்சுற்றி வந்தது. `ம்’ என்றால் பீரங்கிகள் முழங்கும். வீரன் அழகு முத்துக்கோனும் அவனது வீரர்களும் உடல் சிதறிப் போவார்கள். அதைப் பொறுக்கமாட்டாமல்தான் அன்றைய நடுக்காட்டுச் சீமை பாளம்பாளமாய் வெடித்து சுட்டு எரித்துக்கொண்டிருந்தது.

“மன்னிப்புக் கேட்டால் இக்கணமே விடுதலை; வரி கொடுக்க சம்மதித்தால் உயிர் மிஞ்சும்” என்று கும்பினிப்படை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், “தாய் நாட்டின் மானத்துக்காக மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார் ” என்ற வீரன் அழகுமுத்துக் கோனின் கர்ஜனையைக் கேட்டு கும்பினிப்படை அதிர்ந்தது.
ஆத்திரம் கொண்டது.இருநூற்று நாற்பத்தெட்டு வீரர்களின் தோள்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயில் இடப்பக்கம் மூன்று தளபதிகளையும் வலப்பக்கம் மூன்று தளபதிகளையும் நடுவில் வீரன் அழகுமுத்துக்கோனையும் நிறுத்தினார்கள். பீரங்கிகள் வெடித்துச் சிதறின. வீர மைந்தர்களின் ரத்தத்தால் நனைந்தது நடுக்காட்டுச் சீமை.இந்தியாவின் விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல் காணிக்கையாக்கி இந்திய விடுதலை வரலாற்றின் பக்கத்தில் இடம்பிடித்துக் கொண்டார் வீரன் அழகுமுத்துக்கோன்.தாய்மண்ணை அடிமைப்படுத்த நினைத்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராக சுதந்திர முழக்கமிட்ட மற்றுமொரு வீரனைத்  தேவர் சமூகம் தந்தது என்பது மறுக்கவும், மறைக்கவும் முடியாத வரலாறு.
ஆனால், அப்படிப்பட்ட முக்குலத்தை சேர்ந்த மாவீரனை வேறு யாரெல்லாமோ இன்று உரிமை கொண்டாடுவதை எண்ணி, உண்மையை உலகறிய செய்ய வெளிவந்த நூலை இங்கே தேவர் முக்குலத்தோர் தளத்தின் மூலமாக அறிய தருகிறோம்.படித்து தெளிவுறுக.
வீரன் அழகுமுத்து சேர்வை

நூல்             :  மறவர் குல மன்னன் வீரன் அழகுமுத்து சேர்வை
ஆசிரியர்    :  சேவாரத்னா நெல்லை மா. சேதுராமபாண்டியன்
வெளியீடு  :  அகில இந்திய தேவர் முன்னேற்றக் கழகம்,
44-A, மேல ரத வீதி, சி.என்.கிராம,
திருநெல்வேலி – 627 001
நுழைவாயில்:
எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுமே அல்லாது வேறொன்றும் அறியேன் பராபரமே.
அன்புடையீர்! வணக்கம்! நலம் வாழ்க! ஒரு பொருளை உரிமை கொண்டாடும் பொது, அது தனக்கு உரியது தான் என்பதற்கான சான்று அல்லது சாட்சி அல்லது மனசாட்சி வேண்டும். தனக்கு பொருள் ஏதும் இல்லை என்பதற்காக இன்னொருவர் வைத்திருக்கும் பல பொருள்களில் ஒன்றை தெரிந்தோ, தெரியாமலோ எடுத்து வைத்துக் கொண்டு அதற்கு சொந்தம் கொண்டாடுவது, எந்த வகையில் நியாயம்? எந்த வகையிலும் சொந்தம் கொண்டாடத் தகுதி இல்லாத போது, தவறாக சொந்தங் கொண்டாடி போலி பெருமை தேடுவது, சொந்தம் கொண்டாடுவோரின் தன்மானத்தின் மீது சந்தேகம் உருவாக வழி வகுக்காதா? இந்த சிந்தனையோடு, எழுதப்பட்டது தான் “வீரன் அழகுமுத்து சேர்வை மறவர் குல மன்னன்” என்ற இந்தச் சிறு நூலாகும்.
மற்றவர் பெருமையை அபகரித்து, போலி பெருமை தேடும் அளவுக்கு எங்கள்(முக்குலத்தோர்) சமூகம் இல்லை. ஏனெனில் எங்களுக்குள்ள வரலாற்றுப் பெருமைகள் வேறு எவருக்கும் இல்லை என்பது உலகறிந்த உண்மை. அதற்காக எங்கள் பெருமைகளில் ஒன்று திருடப்பட்டால் நமக்குத்தான் வேறு பல பெருமைகள் உள்ளனவே, இது ஒன்று போனால் போகட்டும் என்று விட்டு விட முடியாது. கூடாது. விட்டு விடுவது அல்லது விட்டுக் கொடுப்பது எங்களுக்குப் பெருமை தாராது. எங்கள் புகழ் அனைத்தையும் பேணிக்காக்கும் கடமையும், உரிமையும் எங்களுக்கு உண்டு.
இந்த நல்லெண்ணத்துடன் தான், மாவீரன் அழகுமுத்து சேர்வையை, அழகுமுத்து கோனாராக்கிப் பெருமைப் படுத்துவது சரியல்ல என்பதை எடுத்துக் கூறத்தான் இப்படைப்பு.நூலை மிக அடக்கத்துடன் எழுதியுள்ளேன்(ஆசிரியர்). எங்கள் வரலாற்றில் திரிபு திணிக்கப்படுவதை வரலாற்றுக்கு சொந்தக்காரர்களாகிய நாங்கள் வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல என்பது பொதுவான கருத்தாகும்.
வீரன் அழகுமுத்து சேர்வை என்ற பெயருடைய எங்கள் வீட்டில் பிறந்த வீரமகனை யாவரும் மரியாதையுடன் உறவாடலாம்! ஆனால் களவாடக் கூடாதல்லவா! களவாடுவதை தடுப்பது, அந்த வீரப் பிள்ளை பிறந்த தேவர்குலத்தாரின் தார்மீகக் கடமை அல்லவா! அந்தக் கடமையை இந்த சிறுநூல் மூலம் ஓரளவு செய்துள்ளதாக நம்புகிறேன்.
இதனை நடுநிலைமையுடன் சிந்திப்பவர்கள் அனைவரும், வீரன் அழகுமுத்து சேர்வை தேவர்குலத்து சிங்கம் என்பதை ஒப்புக் கொள்வார்கள்! வீரன் அழகுமுத்துக் கோன்(அரசன்) கோனார் அல்ல என்பதை புரிந்து அவருக்கு ரத்த வழி சொந்தம் கொண்டாட எங்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்பதை ஒப்புக் கொள்வதுதான், அவர்கள் தங்கள் மனசாட்சியை மதிப்பதற்கு அழகாகும். போலிப் பெருமைக்கு தங்களை ஆளாக்கிக் கொண்டிருப்பவர்களில் பலருக்கு மாவீரன் அழகுமுத்து தேவர் குலத்தவர் என்பது தெரியும். ஆனாலும் இயன்றமட்டும் சாதித்துப் பார்ப்போம் என்ற உள்ளுணர்வுடன் செயல்படுகிறார்கள். வீண் முயற்சியில் அவர்கள் இன்னமும் ஈடுபடுவது, அவர்களுக்கு நல்லது அல்ல.
நான் எல்லோரையும் மதிப்பவன்(ஆசிரியர்). மனித நேயத்துடன் பழகுபவன். ஆனால் எங்கள் உரிமையிலோ, பெருமையிலோ வீணாகக் குறுக்கிடுவோரை எண்ணி வருத்துப்படுகிறவன். எங்களது விலை மதிப்பற்ற பொருளை கவர்ந்து கொண்டதாக எண்ணி, உள்ளுக்குள் மகிழ்ச்சி கொள்ளாதீர்கள். அது நீடிக்காது. இந்தச் சிறுநூல் ஒரு மாவீரன் பிறந்த குலத்தின் பெருமையை பாதுகாக்கப் புறப்பட்ட படைக்கலன்களில் ஒன்று தான். நான் சமூக நல்லிணக்கத்தை உருவாக்கிட உழைப்பவன். யாரையும் புண்படுத்திடக்கூடாது; மனித நேயமே அமைதிக்கும், நல்வாழ்வுக்கும் துணை புரியும் என்ற நம்பிக்கை கொண்டவன். இந்த மனநிலையில் இருந்துதான் இச்சிறு நூலை, உண்மையை வெளிச்சமிட்டுக் காட்டிடும் வரலாற்று உணர்வுடன் எழுதினேன்.
எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் – மக்கள்
தனை ஈன்ற தமிழ்நாடு தனக்கும் – என்னால்
திணை அளவு நலமேனும் கிடைக்குமாயின், நான்
செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாகும்.
உன்னை ஒன்று வேண்டுகிறேன் – என்னால்
ஆவதொன்று உண்டாயின் அதற்கெந்தன்
உயிர் உண்டு!
(- பாவேந்தர் பாரதிதாசன்.)
அன்புள்ள சேவாரத்னா நெல்லை மா. சேதுராமபாண்டியன்.
வரலாறைத் தேடி

வரப் புயர நீர் உயரும்!
நீர் உயர நெல் உயரும்!
நெல் உயர கோன் உயரும்!
கோன் உயரக் குடி உயரும்! – அவ்வையார்.
இந்த வாழ்த்துப் பாடலில் “கோன்” என்ற சொல், அரசன், மன்னன் என்ற பொருளைக் கொண்டதாகும்! அவ்வையார் ஒரு மன்னனை வரப்புயர வாழ்க என்று வாழ்த்தினார். அதன் விரிந்த பொருளை பாடிக்காட்டினார். அது தான் மேற்கண்ட பாடல்.இந்தப் பாடலில் இடம் பெற்ற கோன் என்ற சொல்லை வைத்துக் கொண்டு எங்கள் சமுதாயத்தை தான் அவ்வையார் கோனார் என்று குறிப்பிட்டுள்ளார் என்று எவரும் கூறிடார்! வாதிடார்!
கோன்” என்ற சொல்லை கோனார் என்று நினைத்துக் கொண்டு, மாவீரன் அழகுமுத்துக் கோன் (அரசன்) என்ற அழகுமுத்து சேர்வையை தனது சமூகத்தைச் சேர்ந்தவர் என்று சொந்தம் கொண்டாடுவது வேடிக்கையானது.சேர்வைக்காரன் அல்லது சேர்வை என்ற சொல், சேர்த்து வைத்தவன் அல்லது சேர்ந்திருப்போர்க்குத் தலைவன் என்ற பொருளைக் குறிக்கும் சொல்லாகும்.
முக்குலத்தோர் என்று அழைக்கப்படும் கள்ளர், மறவர், அகம்படியர் என்ற முக்கிய 3 பிரிவுகளும் தேவர் என்ற ஒரு சமுதாயத்திற்குள் உள்ள உட்பிரிவுகளாகும்.இந்த முக்கிய 3 பிரிவுகளுக்குள்ளே சேர்வை, அம்பலம், தொண்டைமான், வாண்டையார் உள்ளிட்ட 34 கிளைப் பிரிவினர் உள்ளனர்.
அனைவரும் மறவர். நெல்லை மாவட்ட முன்னாள் ஆட்சித் தலைவர் பாஸ்கரத் தொண்டைமான் ஐ.ஏ.எஸ்., அவர்கள் “மறவர் சரித்திரம்” என்ற ஆய்வு நூலை விரிவாக எழுதி வெளியிட்டார். அதன் விளக்கம் காணலாம். சேர்வை என்ற பிரிவில்தான், மாவீரர்களான சிவகங்கை மன்னர்கள் – மருதுபாண்டியர்கள் வருகிறார்கள். அந்த மாமன்னர்களின் மானமிகு வீரமிகு தியாகத்தால் மேலும் பெருமை பெற்றது தேவர் சமுதாயம்.
வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது!
வேலும் வாழும் தங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது!
எக்குலத் தோரும் ஏற்றிப்புகழ்வது எங்கள் பெருமையடா!
எம் முக்குலத்தோர்க்கே உலகில் உவமை காண்பது அருமையடா!
- என்று முகவை மண்ணின் மைந்தன் கவியரசு கண்ணதாசன் ‘சிவகங்கை சீமை’ திரைப்படத்தில் மருதுபாண்டியர்களை மனதில் நிறுத்தி எழுதிய பாடல் வரிகள் இவை. தேவர் இன வரலாற்றை சங்க இலக்கியங்களை ஆய்வு செய்தும், தமிழக கிராமங்களில் ஆய்வு செய்தும் எழுதி, எக்காலமும் போற்றப்படும் எழில்மிக்க ஏற்றமிக்க நூலாக வெளியிடுமாறு, முனைவர் நாவுக்கரசு கா.காளிமுத்து அவர்களை கேட்டு, 29.06.2003ல் மதுரையில் நடந்த அகில இந்திய தேவர் முன்னேற்றக் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். காரணம், தேவர் சமுதாய மன்னர்களை, மாவீரர்களை, மாபெரும் தியாகிகளை, வேறு சமுதாயத்தினர் சொந்தம் கொண்டாடி, வரலாற்றுப் பிழை செய்ய முற்படுகின்றனர்.
தேவர் சமுதாயத்திற்கே உரிய பாண்டியர் என்ற சீர்மிகு அடைமொழியை யார் யாரெல்லாம் தங்கள் பெயருக்கு பின்னால் சேர்த்துப் போலி பெருமை தேடுகிறார்கள்! வரிப்புலியை போல் உடலில் சூடு பதித்துக் கொள்கிற காட்டுப் பூனைகளை வரிப்புலிகள் என்று வரலாறு அறிந்தோர் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். தேவர் வீட்டில் ஆண் மகவு பிறந்தால் “என்ன பாண்டியன் பிறந்திருக்கிறாராமே” என்றும், பெண் மகவு பிறந்தால் “என்ன நாச்சியார் பிறந்துள்ளாரா? நல்லா இருக்கிறாரா?”
என்றும் விசாரிக்கும் வழக்கம் இன்றளவும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் வழங்கி வருகிறது. ஆகவே, பிறவிப் பாண்டியர்களாக தேவர் இனம் பண்டைப் புகழ் தாங்கி விளங்குவதை காழ்ப்புணர்வுகளால் பொறுக்க இயலாமல் போவது இயல்புதான். சிலர் நன்றிக்காக தனது பெயரோடு அல்லது தங்கள் மகன்கள் பெயரோடு பாண்டியன் என்ற சாதிப் பெருமைக் குறியை சேர்த்து வைத்துக் கொள்வதையும் காணலாம். இறைவனுக்கு நிகராக ஆம்! அந்த தேவாதி தேவனுக்கு நிகராக விளங்கி நாட்டை ஆண்டவர்கள் தேவர் எனப்பட்டனர். அவர்கள் வீரமிகுந்தவர்களாக விளங்கி, போரிட்டு நாட்டைக் காத்தமையால் மறவர் ஆயினர். விவேகத்துடன் சங்கம் வைத்துத் தமிழ் வளர்க்கும் அளவுக்கு அவர்கள் பாண்டித்துவம் பெற்றிருந்ததால், அவர்கள் பாண்டியர் எனப் போற்றப்பட்டனர்.
தேவர், மறவன், பாண்டியன் என்று 3 சொற்களால் குறிப்பிடப்படுபவர்களும் தேவர் சமுதாயத்தினர் தான். இவையும் செய்த தொழிலை வைத்து வைக்கப்பட்ட பெயர்கள் தான் என்பதை நாங்கள் மறைப்பதற்கு இல்லை. பொதுவாக சாதிப் பெயர்கள் பலவும் அவர்கள் செய்த தொழிலை குறிக்கும்படியாக குறிக்கப்பட்டது.
செப்பேடு:

“எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பதறிவு”
என்ற வான்புகழ் வள்ளுவனின் தேமதுர அறிவுரையே இந்தக் குறள்பா. யார் என்ன சொன்னாலும், அதன் உண்மைப் பொருளை உணர்வது தான் அறிவு. ஆனால் அதற்கேற்ற மூளைப் பலம், ஆய்வுத் திறன், நடுநிலை சிந்தனை, பொறுமை, நிதானம், சாதிமத உணர்ச்சி வசப்படாமை தேவை.
இவை இல்லாதார்தான் எடுப்பார் கைப்பிள்ளைகளாக மாறி, உண்மை எது எனத் தெரியாமல் நுனிப்புல் மேய்ந்து, நுண்ணறிவை பயன்படுத்தாமல் சுயநலவாதிகளின் சூழ்ச்சி வலையில் விழுந்து வீண் வம்புகளை விதைக்க துணை நிற்கின்றனர். வீரன் அழகுமுத்து சேர்வைக்காரனை அவனது வீரம், ஆளுமைத் திறன் எண்ணி “கோன்” அதாவது மன்னன் என்ற அடைமொழி கூட்டி அழகுமுத்துக் கோன் என்று வழங்கினர். அழகுமுத்து பிறப்பால் சேர்வை (மறவர்) சிறப்பால் கோன்(அரசன், மன்னன்,ராஜா).
வீரன் அழகுமுத்து சேர்வையின் வாரிசுகள் சிலர் ,கட்டாலங்குளத்தில் தற்போதும் வாழ்கிறார்கள். சிலர், பிழைப்பு-தொழில் நாடி வேறு ஊர்களுக்கு சென்று வாழ்கின்றனர்.பத்திரங்கள் நடைமுறைக்கு வராத காலத்தில், தாள் உருவாகாத நிலையில் பத்திரங்களை செப்புத் தகடுகளில் எழுதிக் கொடுப்பது வழக்கமாக இருந்துள்ளது. வரலாற்றுக் குறிப்புகளை கற்களில் பொரித்து வைத்தனர்.
சிலைகள் வடிவில் செதுக்கி வைத்தனர்.செப்புத் தகடுகளில் எழுதித் தரப்பட்டவை பட்டயம் என வழங்கப்படுகிறது. வீரன் அழகுமுத்து சேர்வைக்காரனுக்கு, காசி கோத்திரம் விஸ்வநாத நாயக்கரவர்கள் புத்திரன் பெரிய வீரப்ப நாயக்கன் அவர்கள் கிருஷ்ணா கோத்திரம் கோபால வம்சம் அழகுமுத்து சேர்வைக்காரன் புத்திரன் அழகுமுத்து சேர்வைக்காரனுக்கு எழுதிக் கொடுத்த செப்புப் பட்டயத்தின் ஒரு பகுதி நகல் இங்கே அப்படியே தரப்பட்டுள்ளது.

செப்புப்பட்டயம்:



மேற்கண்ட செப்புப்பட்டயத்தில் எழுதப்பட்டிருப்பதவாது:
இன்னான் கொல்கைக் குட்பட்ட நிலமும் மாத்தானம்பட்டி கிழக்கு மால் வைப்பாற்று எல்கைக்கு மேற்கு, தேற்குமால் குளத்தூர் எல்கைக்கு வடக்கு மேற்கு மால் செங்கப்படை எல்கைக்கு கிழக்கு, வடக்குமால் மந்திக்குலம் எல்கைக்கும் பெருமாள் கோவிலுக்கும் தெற்கு, இந்த நான்கு எல்கைக் குள்பட்ட நிலமும், இதில் கட்டாலங்குளம் சோழபுரம் வாலனம்பட்டி மாக்காலம்பட்டி ஆகக் கிராமம் நாளும் தனக்கு அமரமாகவும் தீத்தான்பட்டி குருவி நத்தம் கிராமம் இரண்டும் அழகப்பன் சேர்வைக்காரன் பாட்டாத்தார்க்கு தந்த மானியமாகவும் விட்டுக் குடுத்த படியினாலே ஆகக் கிராமம் ஆறு மதில்சேர்ந்த பட்டியும் இதிலுள்ள நஞ்சை புஞ்சை நிகி நிட்சேபமும் சிவதரு பாசானம் அச்சானிய ஆகாமியம் சித்த சாத்தியம் களெங்கிர அட்ட யோகா தேசாக்காரியங்களும் உன்னுடைய புத்திர பவுதிய பாரம்பரியமாக நயந்திரார்க்கு மாகக் தனாதி வினியவிக்கிரம யோக்கியமாகவும் ஆண்டனுபவித்துக் கொண்டு சுகமயிருக்கவும் இந்தப் படிக்குக் காசிப கோத்திரம் விசுவநாத நாயக்கரவர்கள் புத்திரன் கிருஷ்ணப்ப நாயக்கரவர்கள் புத்திரன் பெரிய வீரப்ப நாயக்கரவர்கள் கிருஷ்டினக் கோத்திரம் கோபால வம்சம் அழகுமுத்து சேர்வைக்காரனுக்கு எழுதிக் கொடுத்த பட்டையம் உ.மீனாட்சியம்மாள் துணை. இதிலுருந்து அழகுமுத்து சேர்வைக்காரன் மகன் அழகுமுத்து சேர்வைக்காரன் என்பது விளங்கும். அதாவது, அழகுமுத்து செர்வைக்காரனின் தந்தையார் பெயரும் அழகுமுத்து சேர்வைக்காரன் என்பது தெரிகிறது. வீரன் அழகுமுத்து சேர்வைக்காரன் என்பதில் மட்டுமல்ல அவனது தந்தையின் பெயரில் கோனார் என்ற சாதிச் சொல் இடம் பெறவில்லை என்பதை சற்று ஊன்றிக் கவனித்தால் புரியும்.
இப்போது திரைப்படத் துறையில் கிராமிய இசையால் புகழ் பெற்று வருகிறவர் பரவை முனியம்மாள். “தூள்” படத்தின் மூலம் வெளி உலகுக்கு அறிமுகமாகி இப்போது “என புருஷன்”, “எதிர் வீட்டுக்காரன்” உள்ளிட்ட பல படங்களில் பாடி நடித்து வருவதோடு, சின்னத்திரையிலும் மின்னி வருகிறார் இவர்.
இவரது தந்தை வாடிப்பட்டி பக்கம் உள்ள செல்வகுலம் பெருமாள்பட்டியை சேர்ந்த கருப்பயா சேர்வை என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் படுகொலை செய்யப்பட்டாரே தா.கிருட்டிணன் இவரும் சேர்வை. சேர்வைக்காரன் என்ற சொல், சேர்வை சாதியில் பிரபலமானவரைக் குறிக்கும் சொல்லாகும். மேற்கண்ட பட்டயத்தில் இடம்பெற்றுள்ள கோபால வம்சம், கிருஷ்ண கோத்திரம் என்ற சொற்களைப் பற்றிக்கொண்டு தான், வீரன் அழகுமுத்து சேர்வையை கோனார் என்று கூறி சாதிசாயம் பூசி சிலை எடுத்தார்கள், விழா நடத்தினார்கள்.கோபால வம்சம் என்பது பிராமணர்களின் ஒரு பிரிவினரையும், வேறு மேல்சாதியரில் சில பிரிவுகளையும் குறிப்பிடும் சொல்லாக உள்ளது.
கோபாலன் என்ற பெருமாளை-நாராயணனை தலைமுறை தலைமுறையாக வழிபாடும் சமூகத்தின் சில பிரிவினர் கோபாலவம்சமாகத் தங்களை கூறி வருவது எல்லோரும் அறிந்ததே. கிருஷ்ண கோத்திரம் என்பது, கிருஷ்ணனாகிய கோபாலனை குல தெய்வமாக நீண்ட காலமாக வழிபடுவோரை குறிக்கும் சொல்லாக உள்ளது. இவ்வாறு வழிபடுவோர் விபூதியை நெற்றியின் மேல் நோக்கி நாமம் போல் பூசுகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள தேவர் சமூகத்தினர் நாராயணனை குல தெய்வமாக வழிபடுகின்றனர். இவர்கள் எல்லாம் தங்களை “கிருஷ்ணகோத்திரம்” என்று கூறிகிறார்கள். குலம் என்பது சாதியை குறிக்கிறது. முக்குலத்தோர், கோனார் குலத்தோர், பிராமணகுலத்தோர் என, என்ன சதியோ அந்த சாதியை ஒருங்கிணைத்துக் கூறும் சொல் ‘குலம்’ என்பதாக உள்ளது.
அனைத்து தமிழ் நாட்டையும் சேர்த்துக் குறிப்பிடும் போது ‘தமிழ்க்குலம்’ என்கிறோம். ஆகவே, கோபால வம்சம், கிருஷ்ண கோத்திரம் என்பது பரம்பரை வழிபாடு முறையை வைத்து பல சமூகத்தார்களின் உட்பிரிவினர் பலரை குறிக்கும் சொல்லாகும்.
சாதிகளில் நடுசாதியாகிய கோனார் என்ற இடையர் குலம் விளங்குகிறது. நெல்லை மாவட்டத்திலுள்ள கிராமங்கள் பலவற்றிலும் மறவனும்-இடையனும் ஒன்று. கொண்டை வைத்தவன் ‘மறவன்’. ‘கோ” வைத்தவன் இடையன் என்று கூறுவது வழக்கு மொழியாக உள்ளது. இதிலிருந்து கோபாலவம்சம் கிருஷன் கோத்திரம் என்பது பல சாதிப் பிரிவுகள் பயன்படுத்தும் சொற்களே தவிர குறிப்பிட்ட ஒரு சாதியை அடையாளம் காட்டும் சொற்கள் அல்ல என்பது தெளிவாகிறது.அதுமட்டுமல்ல, இதே பட்டயத்தில் ‘காசிப கோத்திரம் விஸ்வநாத நாயக்கர் அவர்கள் புத்திரன் கிருஷ்ணப்ப நாயக்கர் அவர்கள் புத்திரன் வீரப்ப நாயக்கர் அவர்கள்’ என்ற வாக்கியமும் இடம் பெற்றுள்ளது.
காசிப கோத்திரம் என்றால், காசி விஸ்வநாதக் கடவுளாகிய சிவபெருமானை வழிபாடும் வழக்கம் கொண்டவர் என்பது பொருள். நாயக்கர்கள் எல்லாம் காசிப கோத்திரம் அல்லர். வீரபாண்டிய கட்டபொம்மன் ஜக்கம்மாள் என்ற பராசக்தியை வழிபட்டு வந்த சக்தி கோத்திரத்தை சார்ந்த நாயக்கர்.
ஆகவே காசிப கோத்திரம் காசி விஸ்வநாதக் கடவுளைக் குலதெய்வமாக பரம்பரையாக வழிபாடும் குலத்தாரை அல்லது குலத்தின் உட்பிரிவாளரைக் குறிக்கும் என்பதையும் தெளிதல் நன்று. பொதுவில் தனது சாதிக்குக் ஒரு அடையாளம் தேவையென விரும்புவது, ஆசைப்படுவது சாதியத்தை வளர்த்து அதன் மூலம் சுயலாபவேட்டையில் ஈடுபடுவோரின் செயலாக மாறியது ஏன்? ஓட்டுக்காகப் பூசப்படும் போலிப் பூச்சுக்களும், பொய் விளம்பரங்களும் அடிப்படையை தகர்க்க முடியுமா? நீருக்குள் விடும் காற்று வெளியே வந்து தானே தீரும்!
இந்த சுதந்திரப் போருக்கு முதல் முழக்கமிட்ட மான மறவன் – மாவீரன் மன்னன் பூலித்தேவனுக்கு நெற்கட்டான் செவ்வல், வாசுதேவ நல்லூர், ராஜபாளையம் ஆகிய 3 இடங்களில் கோட்டைகள் இருந்தன! அவனது படை வரிசைகள் பல. அவற்றுக்குத் தளபதிகள் பலர். அவர்களுள் ஒருவன் ஒண்டி வீரன். இவன் பகடை சமுதாயத்தைச் சேர்ந்தவன்! துப்புரவுத் தொழிலார்கள் தங்கள் குலத்தின் அடையாளமாக ஒண்டி வீரனை எண்ணிப் போற்றி புகழ்வதில் பொருள் உண்டு! நியாயம் உள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மனின் தலைமகனாக தலைமைத் தளபதியாக விளங்கி, போர்க்களத்தில் வெள்ளையரின் துப்பாக்கி குண்டுக்கு மார்புகாட்டி மடிந்த மாவீரன் பகதூர் வெள்ளையத்தேவன்.
அவனுக்கு அடுத்த நிலையில் இருந்த தளபதிகளில் வீரன் சுந்தரலிங்கம் ஒருவன். அவன் தாழ்த்தப்பட்ட சமூத்தின் அடையாள புருஷனாக போற்றப்படுவதில் பொருள் உண்டு. நியாயம் உள்ளது. ஆனால் மன்னர் பாஸ்கர சேதுபதியையோ, வீரமங்கை வேலுநாச்சியாரையோ, மாமன்னர் பூலித்தேவனையோ, கட்டாலங்குளம் அழகுமுத்து சேர்வைக்காரனையோ தேவர் குலத்தில் இருந்து, ஆம் வீரமறவர் குலத்தில் இருந்து பிரித்துக் கொண்டு போய் யாரும் சொந்தம் கொண்டாட நினைப்பது அல்லது சொந்தங் கொண்டாடுவது வரலாற்றை பிழை படுத்துவதாக அமையாதா? அன்றைய கால கட்டத்தில் ஆளும் பொறுப்பில் பரவலாக தேவர்களும் இருந்ததற்கு, மனித லட்சன ஆராய்ச்சி அறிஞர்கள் செய்து வைத்த கபடமற்ற ஏற்பாடே காரணம்.
இன்ன லட்சணம் உடையவன் இன்ன தொழிலையே செய்வதற்கு ஏற்றவன் என ஆய்ந்தறிந்து தொழில் ரீதியில் சாதி பிரிவு ஏற்படுத்தப்பட்ட போது, மறவர் குலம் என்ற பாண்டியர் குலம் ஆட்சிப் பொறுப்புக்கு – காவல் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டது. அதன் படியே ஆட்சி அமைப்புகள், காவல் அமைப்புகள் உருவாயின. மறவர் குலத்தில் 34 பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் சேர்வை. இந்த சேர்வை குலத்தவன் தான் கட்டாலங்குளம் ஜாமீன் அழகுமுத்து சேர்வைக்காரன் என்பதை உறுதிப்படுத்த எத்தனையோ சான்றுகள் உள்ளன.
அவற்றில் ஒன்று நாயக்க மன்னர் அழகுமுத்து சேர்வைக்காரனுக்கு பட்டியம் எழுதிக் கொடுத்ததைக் குறிப்பிடும் பழங்கால கல்வெட்டு ஒன்று. இது பாண்டிய மன்னர் வைத்த கல்வெட்டாகும். இந்தக் கல்வெட்டிலும் சேர்வை என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதும் சரியான சான்று. இதோ அந்தக் கல்வெட்டு.
ஆவணங்கள் இன்றியமையாதன என்பதை நாம் அறிவோம். ஆனால் அது பற்றி நாம் அடிக்கடி சிந்திப்பதில்லை. ஆவணங்கள் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இடம் பெறுகின்றன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இரயிலிலோ, பேருந்துகளிலோ, விமானத்திலோ பயணம் செய்யும் ஒரு நபர் அந்தப் பயணத்தை அவர் தொடர்ந்து நீடிக்கவும், தாம் போய்ச் சேரவேண்டிய இடத்தை அடையவும், அவரால் பெறப்பட்ட பயணச்சீட்டை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.
வழக்குகளும் ஆவணங்களும்:

நீதி மன்றங்களில் வழக்குகள் உருவாகின்றன என்றால், அவைகளுக்கு போது மக்களோ அல்லது அதிகாரிகளோ காரணமாவர். அவர்கள் தொடுக்கும் வழக்குகளுக்கும், போலிஸ் தொடரும் பொதுநலம் சார்ந்த வழக்குகளுக்கும் அடிப்படை தேவை ஆவணங்களே. பல்வேறு வழக்குளுக்கு முதல் தகவல் அறிக்கை (FIR) என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிவோம். அதுவே வழக்கின் அடிப்படை ஆவணமாகிறது. சில வழக்குகள் தொடர ஆவணங்கள் கிடைக்காமல், நீதியை பெறமுடியாமல் வழக்கறிஞர்களும், பொதுமக்களும், ஏன் நீதிபதிகளும் ஆதங்கப்படும் நிலைகளும் உண்டு.
ஒரு சில நேரங்களில் நீதிபதிகள் அதிர்ச்சி அடையும் வகையில் முக்கிய வழக்குகளில் திடீரென ஆவணங்கள் கிடைத்து, வழக்கின் உச்சகட்டத்தை ஏற்படுத்துகின்றன அல்லது யாராவது ஒருவர் வந்து தன்னிடம் ஆதாரம் இருப்பதாக கூறி ஆவணங்கள் சிலவற்றை நேரிலோ, வழக்கறிஞர்கள் மூலமாகவோ அளித்து வழக்கை திசை திருப்பி எல்லோரையும் பிரமிக்கச் செய்து விடுவதும் உண்டு.
சில நேரங்களில் நீதிபதிகளுக்கு அஞ்சலில் ஒரு தகவல் வந்ததாக தெரிவித்து, அதை ஒரு ஆவணமாகக் கருதி அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு அதன் மூலம் தீர்ப்புகள் உருவாவதும் உண்டு. இப்படி உருவாகும் பல்வேறு நீதிமன்ற ஆவணங்கள் அந்தந்த கால கட்டங்களில் உள்ள மக்களின் சமூக வாழ்க்கையினை பிரதிபலிக்கின்றன.
ஆவணங்களில் இந்திய கலாசார அடிப்படைகள்:
இந்தியக் கலாச்சாரத் தொன்மை பற்றிய ஆய்வுகள் யாவும் இன்னும் நடந்து கொண்டே இருக்கின்றன. அதற்கான ஆவணங்கள்/தகவல்கள் யாவும் புதை பொருட்களிலிருந்தும், கல்வெட்டுக்களிலிருந்தும், பழங்கால குகை ஓவியங்கள், நாணயங்கள் போன்றவற்றிலிருந்தும் ஆதாரங்களைச் சேகரித்த வண்ணமாகவே இருக்கிறோம். இது முடிவடையாத ஒன்று.
வீரன் அழகுமுத்து ‘சேர்வை’ (மறவர்) குலத்தவன் என்பதற்கு மேலே கண்ட பட்டய நகலும், கல்வெட்டு நகலும் வரலாற்று ஆவணங்கள்-அடிப்படை ஆதாரங்கள் அல்லவே? இன்னமுள்ள ஆதாரங்களை அடுத்து பார்ப்போம். சூடேற்றிக் கொள்வோம்:


அத்தோடு நமது குலகொழுந்தை சொந்தம் கொண்டாட வருவோரை வரவேற்போம். வீரர்களையும் தியாகிகளையும், யார் போற்றினாலும், துதித்தாலும் நாமும் அவர்களோடு இணைந்து செயல்படுவோம். ஆனால், நமது உறவை தனது உறவாக்க விபரம் தெரியாமல் யார் முற்பட்டாலும் அவருக்கு புரிய வைத்திடவும், நமது உறவை பாதுகாத்திடவும் நமக்கு உரிமை உண்டு. ஆகவே தான் இந்த சிறுநூல் உருவானது.
சங்கரதாஸ் சுவாமிகள நாடகக்கலையின் தந்தை என போற்றப்படுகிறார். அவர் மறவர் இனத்தின் ஒப்பற்ற கலை மைந்தர் ஆவார். அவரது பெயரில் ‘தாஸ்’ இருப்பதால் அவரை கோனார் என்று எண்ணி சொந்தம் கொண்டாட யாரும் முற்பட்டு விடக்கூடாது என்பது நமது கவலை. தியாகி விஸ்வநாத தாஸ் அவர்கள் நாவிதர் (மருத்துவர்) குலத்தை சேர்ந்த மாமனிதர்.
அவருடைய பெயரில் தாஸ் இருப்பதால் அவரையும் எதிகாலத்தில் கோனார் என்று கூறி யாரும் சொந்தம் கொண்டாட வந்துவிடக் கூடாது என்பதும் நமது கவலை. ஆனால் அப்படி நடக்காது என்று நம்புகிறோம். நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே வன்னிக்கோனேந்தல் என்ற கிராமம் உள்ளது.
அதாவது வன்னிக்கோன் ஏந்தல் என்பது அந்த ஊரின் பெயர். அந்தப் பகுதியை ஆண்ட மன்னனின் பெயர் வன்மையன். வன்மையன் என்றால் வன்மை மிக்கவன் என்பது பொருள். மன்னன் என்றால் கோன் என்பது பொருள். ஆகவே மன்னன் வன்மையன், வன்மையக்கொன் என்று அழைக்கப்பட்டான். அவன் சீர்மிகுந்த ஆற்றலும், சிந்தனையும் கொண்டிருந்ததால் ‘ஏந்தல்’ என்று போற்றப்பட்டான். ஆகவே அவன் ஆண்ட பகுதி வன்மையகோன் ஏந்தல் என்று வழங்கலாயிற்று.
அதுவே பிற்காலத்தில் மருவி வன்னிக்கோனேந்தல் என்று மாறியது. ஆகவே, இந்த ஊர் பெயரில் கோன் என்று இருப்பதை வைத்துக்கொண்டு வன்மையக்கோன், கோனார் குலத்தைச் சேர்ந்தவர் என்று இதுவரை யாரும் சொந்தம் கொண்டாடவில்லை.
அவ்வாறு சொந்தம் கொண்டாடி இருந்தால் வீரன் அழகுமுத்து மறவர் குலத்தை சேர்ந்தவன் என்று இன்று நாம் சான்றாவணங்கலோடு நிரூபிப்பது போன்ற மற்றொரு நிலை எழுந்திருக்கும். பிற்காலத்தில் இந்தப் பகுதி ஊத்துமலை மன்னரின் ஆளுகைக்கு வந்தது. ஊத்துமலை மன்னரும் மறவர் குல மாணிக்கமே என்பது உலகறிந்த உண்மை. பரம்பரை ரத்தம் உடம்பிலே முறுக்கேறி
ஓடும் அறம் காத்த சமுதாயமே!
ஆன்மிகம் வளர – நிலைக்க ஆலயங்கள்
பல அமைத்த அரசகுலத் தோன்றல்களே!
வரிப்புலிகளை கண்டு தறிகெட்டு ஓடிய பூனைகள்
தங்கள் உடலிலே சூடு போட்டுக் கொள்வதாலேயே
பூனைகள் புலிகள் என்று எவரும் கருதிடார்!
ஆனால் தேவைப்படும் நேரத்தில் கூட பாயாமல் பதுங்கும் குணம் கொண்டோரின் பிறவியிலேயே சந்தேகம் வரும்! ஆகவே சந்தேகத்திற்கு என்றும் இடமளிக்காமல் உள்ளத்துள் உத்வேகம் கொண்ட முத்தமிழ் வளர்த்த முக்குலத்துச் சிங்கங்களே – முக்குலம் எனில் கள்ளர், மறவர், அகமுடையார் என மூன்று பிரிவுகளைக் கொண்ட நாம்! நமது மூதாதையராம் சேர,சோழ,பாண்டிய மன்னர்களின் நீதி வலுவா ஆட்சியில், “கள்ளர்” என்பது மறைந்திருந்து பகை மூலத்தையும், நாடு நடப்புகளையும், உள்ளூர் துரோகிகளையும் அறிந்து அரசர்களுக்கு ரகசியமாகக் கூறும் ஒற்றர் படையைக் குறிக்கும் சொல்லாகும்.
“மறவர்” என்பது களத்தில் எதிரிகளை நேருக்கு நேர் சந்தித்து புறமுதுகு காட்டாமல், வீரப் போர் புரிந்து, நாட்டை காத்தோரைக் குறிக்கும் சொல்லாகும்.
“அகமுடையார்” என்பது கோட்டைக்குள் (அகத்தில்) இருந்த படைப்பிரிவினர். இவர்கள் கோட்டையை உள்ளேயும், வெளியேயும் காத்து நின்றோர். கோட்டைக்குள் புகுந்த எதிரிப்படைகளுடன் மோதி, அவர்களை அழிக்கும் வல்லமை வாய்ந்தவர்கள். இது அகமுடையார் பணியாக இருந்தது.
நமது மன்னர்கள் இந்த முக்குலத்தின் ஏக பிரதிநிதிகளாக, முக்குலத்தின் ஒப்பற்ற வீரமும் விவேகமும் கூடிய ஏந்தல்களாக இருந்தனர். மூன்று பிரிவுகளும் சமநிலை உடைய ஆட்சிப்பிரிவுகள். இந்த வரலாற்று உண்மையை நெஞ்சில் பதிய வைப்போம். யாவருக்கும் புரிய வைப்போம்.
இந்திய விடுதலைப் போரில் முதல் பலியானவர்கள் நாம்! ஆங்கில ஏகாதிபத்தியதிற்கு பேராபத்தை விளைவித்தவர்கள் நாம்! ஆட்சியை இழந்தோம்! உறவினர்களை பலி கொடுத்தோம்! உடமைகளை இழந்தோம்! ஆனால் தூக்குக் கையிற்றை முத்தமிட்ட போதும் மானத்தை இழக்காமல், மரணத்தை அணைத்தோம். இந்த வரலாறுகளை நினைவு கூர்ந்து நெஞ்சில் சூடேற்றிக் கொள்வோம். வெள்ளை ஏகாதிபத்திய ஏஜென்ட் கமாண்ட்டெண்ட் கான்சாகிப் பீரங்கிப் படைக்கு தன்னையும், தனது படை வீரகளையும் இந்த மண்ணின் விடுதலைக்காக பலி கொடுத்தவர் கட்டாலங்குளம் மன்னன் மாவீரன் மானமறவன் அழகுமுத்து சேர்வைக்காரன். அந்த மாவீரனின் நேரடி வழித் தோன்றல்களான லெஷ்மிராஜவிடம் இருந்து பல்வேறு தகவல்கள், வீரன் அழகுமுத்து சேர்வைக்காரர் பற்றி கிடைத்தது.
அழகுமுத்து சேர்வைக்காரனின் தந்தை அழகுமுத்து சேர்வைக்காரர் கட்டாலங்குளம் பகுதியை அரசாலும் உரிமையை, மதுரையை ஆண்ட மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் குமாரர் பெரிய வீரப்ப நாயக்கர் அவர்களிடம் ஒரு செப்பேட்டின் மூலம் பட்டயம் பெற்று அரசாண்டார். அந்தப் பட்டயத்தில் அழகுமுத்து சேர்வைக்காரன் புத்திரன் அழகுமுத்து சேர்வைக்காரன் எனக் குறிப்பிடப் பட்டுள்ளதை அறிந்தோம்.
அழகுமுத்து சேர்வைக்காரன் கான்சாகிப்பை எதிர்த்து பெத்தநாயக்கனூர் கோட்டையில் போரிட்டதாகக் கிடைத்திருக்கும் ஆதார நூல் வம்சமணி தீபிகை. இது எட்டையாபுரம் சமஸ்தானத்தில் வேலை செய்த சுவாமி தீட்சிதர் என்பவரால் எழுதப் பட்டது. அதில் அழகுமுத்து சேர்வைக்காரன் மற்றும் 5 படைத்தளபதிகளும் பீரங்கி வாயில் வைத்து சுடப்பட்டதாக குறிப்பிடப் பட்டுள்ளது. எட்டயாபுரம் “ஃபாஸ்ட் அண்ட் பிரசண்ட்” என்ற ஆங்கில நூலை டபிள்யு. இ. கணபதிப்பிள்ளை என்பவர் எழுதியுள்ளார். அதிலும் வம்சமணி தீபிகையில் கூறியுள்ளபடியே சொல்லப்பட்டுள்ளது.
இந்த நூல் தான் தற்பொழுது அழகுமுத்து சேர்வைக்காரர் கான்சாகிப்பை எதிர்த்து போர் புரிந்தார் என்று சான்று காட்டுவதற்கு சிறந்த அடிப்படை நூலாக தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் உள்ளது. அந்த நூலில் அரசர் கொடுத்த பட்டயம் பற்றியும் தகவல் உள்ளது. அதிலும் அழகுமுத்து சேர்வைக்காரன் என்று தான் உள்ளது. 1932 ம் ஆண்டு அழகுமுத்து சேர்வைக்காரரின் வாரிசுதாரர்கள், அவர்களின் கார்டியன் பாக்கியத்தாய் அம்மாள் மூலம் தனது ஜாமீன் சொத்துக்களைப் பாகவிஸ்தி மூலம் பெறுகிறார்கள். சொத்தைப் பெற்றவர்கள் விபரம் கீழ்க்கண்டபடி குறிப்பிடப்பட்டுள்ளது.
1) அழகுமுத்து என்ற துரைச்சாமி சேர்வைக்காரர் இந்து ராயர்.
2) சின்னச்சாமி என்ற குமாரெட்டு சேர்வைக்காரர்
3) இவர்கள் இருவரின் மூத்த மகன்களுக்கு தனது இரண்டு மகள்களை பெண் கொடுத்த அப்பாவு அய்யா சேர்வைக்காரர் என்றே உள்ளது.
அவர் பத்திரத்தில் சாட்சியாகவும் ஜாமீன் மேனேஜராகவும் வருகிறார்.அந்த இரண்டு வாரிசுகள் தான் அழகுமுத்து சேர்வைக்காரரின் நேரடி வாரிசுகள், தற்போதும் வாழ்கிறார்கள்.
மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆட்சித் தலைவர்களுக்கும் ஆதரங்களோடு பலரால் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜமீன் ஒழிப்பின் போது இந்திய அரசால் (எஸ்டேட் அபாலிசன் ஆக்ட் படி) நஷ்ட ஈடு பெற்றவர்களின் சான்று ஆவணம் இன்றும் தமிழ்நாடு அரசு செட்டில்மென்ட் டிபார்ட்மெண்டில் உள்ளது.
அதில்
1) அழகுமுத்து என்ற துரைச்சாமி
சேர்வைக்காரனின் புத்திரர்
காசிச்சாமி சேர்வைக்காரர் (சிவத்தசாமி அவர்களின் தந்தை)
2) சின்னச்சாமி என்ற குமாரெட்டு சேர்வைக்காரர் மற்றும் அவர்களின் புதல்வர்கள்:- அ ) சின்னச்சாமி என்ற குமாரெட்டு சேர்வைக்காரர்
ஆ) சுந்தரராஜ சேர்வைக்காரர் வாரிசுதாரர் லக்ஷ்மிராஜா
இ) துரைராஜா சேர்வைக்காரர்
ஈ) பால்துரை சேர்வைக்காரர்
உ) செல்லச்சாமி சேர்வைக்காரர் என்றே உள்ளது.
இது 1955 க்குப் பின்னர் உள்ள ஆவணமாகும்.
இந்த உண்மையை நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக தேவர் குல மக்களுக்கும், கோனார் குல மக்களுக்கும் தெரியப்படுத்துகின்ற நோக்கத்தில் இச்சிறுநூல் எழுதப்பட்டது.
கட்டாலங்குளத்திற்கான வருவாய்த்துறை ஆவணங்கள், ஊராட்சி ஆவணங்கள், வாக்களர் பட்டியல் இவற்றைப் பார்வையிட்டால், இப்பொழுது கூட ஒரு கோனார் வீடு கூட அங்கு இல்லை என்பதை அறியலாம்.
தற்போது, கட்டாலங்குளம் ஊராட்சித் தலைவராக இருப்பவர் திரு. இரா.கருப்பசாமி பாண்டியன் அவர்கள் என்பது குறிப்படத் தக்கது.
ஆகவே காயங்களை நியாயப்படுத்தக் கூடாது. நியாயங்களை காயப்படுத்தவும் கூடாது. வரலாற்றினைப் பேணுவோம்! மாவீரன் அழகுமுத்து சேர்வையைப் போற்றுவோரை போற்றுவோம். பொதுவில் தியாகிகள் அனைவரையும் போற்றுவோம்.அவர்களது வரலாற்றை நமது வாரிசுகளுக்கு பாடம் சொல்லுவோம்.
“சீறி வந்த புலியதனை முறத்தினாலே சிங்காரத் தமிழ் மறத்தி துரத்தினாளே”
இது நமது அன்னையின் பெருமை. இந்தப் பெருமையை காப்போம்.
இச்சிறுநூல் யாரையும் எள்ளளவும் ம

சிவகங்கைச் சீமையின் வீரமங்கையர்

சிவகங்கை நகரம் தனது பெயரை இழந்து உசேன் நகர் என்ற பெயர் தாங்கி, பெருமை இழந்து கிடந்தது.  இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சிவகங்கை ராணி வேலுநாச்சியாரின் வீரப்படை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு போர்முரசு கொட்டிப் புறப்பட்டது.  சுதந்திர தாகம் கொண்ட அந்தப் படையின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் கோச்சடை மல்லாரிராயன், திருப்புவனம் ரங்கராயன், மானாமதுரை பிரைட்டன், பூரியான், மார்டினஸ் ஆகியோர் மண்டியிட்டனர்.
இந்தச் சூழ்நிலையில் காளையார் கோவில் கோட்டையோ போருக்கு ஆயத்தமாகத் தொடங்கியது.  படைவீரர்கள் களைப்பைக் களைந்துவிட்டு அன்று அதிகாலை வேளையில் வேலுநாச்சியாரின் அவசர அழைப்புக் கேட்டு முக்கிய தளபதிகள் அனைவரும் கொலுமண்டபம் விரைந்தனர்.  அங்கே ராணி வேலுநாச்சியார், அவர்களுக்கு முன்னதாக வந்து காத்திருந்தார்.

தளபதிகளைக் கண்டதும் ராணி முகத்தில் புன்னகை மொட்டு விட்டது.  “அனைவரும் வாருங்கள்.  நீங்கள் எதிர்நோக்கிய காலம் வந்துவிட்டது.  நமது படைகளை மூன்று பிரிவாகப் பிரித்து விடுங்கள்.  ஒரு பிரிவுக்கு சின்ன மருது தலைமை தாங்குவார்.  அந்தப் பிரிவு 3 ஆயிரம் படைவீரர்களோடும் எட்டு பீரங்கிகளோடும் திருப்பத்தூர் நோக்கிப் புறப்படட்டும்.  இன்னொரு பிரிவு பெரிய மருது தலைமையில், 4 பீரங்கிகளோடு சிவகங்கை சென்று அரண்மனைக்கு வெளியே தெப்பக்குளக்கரையில் உள்ள உமராதுல் உபராகானையும் அவனது படைகளையும் தாக்கி வெற்றி கொள்ளட்டம்,” என்று நாச்சியார் கூறி முடிக்கும் முன்பே சின்ன மருது அவசரமாய் இடைமறித்து, “மகாராணி சிவகங்கைக் கோட்டையைக் கைப்பற்றுவதுதானே நமது முக்கிய வேலை? அதைப் பற்றி…”
“சின்ன மருது படையும், எனது தலைமையில் மற்றொரு பிரிவுப் படையினரும், நமது பெண்கள் படையும் அந்த வேலையைச் செய்துமுடிக்கும், போதுமா?”
velu-nachiyar“மகாராணி மன்னிக்க வேண்டும்.  சிவகங்கைக் கோட்டையோ பலம் வாய்ந்தது.  அந்தக் கோட்டையை எப்படி சின்னப் படைப்பிரிவு மூலமும் அதுவும் வெள்ளையரின் பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் எதிர்த்துப் போரிட்டுப் பிடிக்க…?”
இந்த முறை குறுக்கிட்ட பெரிய மருது தனது கருத்தை முடிக்கும் முன்னே, ஒரு புதுக்குரல் மண்டபத்தின் வாயிலில் இருந்து ஒலித்தது.
அங்கே தள்ளாத கிழவி ஒருத்தி வந்து கொண்டிருந்தாள்.
சபையின் நடுவே தடுமாறி நடந்து வந்த அவள், வேலுநாச்சியாரை வணங்கிவிட்டு, பேசத் தொடங்கினாள்.
“தளவாய் பெரிய மருது அவர்களே, இப்போது நவராத்திரி விழா நடந்து வருகிறது.  நாளை மறுநாள் விஜயதசமி.  அன்று சிவகங்கைக் கோட்டையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் கொலு வைக்கப்படுகிறது.  இதைப் பார்ப்பதற்காக அன்று ஒருநாள் காலை மட்டும் மக்களுக்கு, அதுவும் பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.  இதைப் பயன்படுத்தி ராணியாரின் தலைமையில் பெண்கள் படை உள்ளே கோட்டைக்குள்  புகுந்துவிடும்.  பிறகு என்ன? வெற்றி, நமது பக்கம்தான்.”
அவள் மூச்சுவிடாமல் சொல்ல, அத்தனை பேரின் கண்களும் வியப்பில் விர்ந்தன.
பெரிய மருதுவின் சந்தேகப் பார்வையைக் கண்டதும் அந்தப் பெண் கடகடவென நகைத்தாள்.  “பேராண்டி பெரிய மருது, இப்போது என்னைத் தெரிகிறதா?” என்றபடியே மெல்ல தனது தலையில் கை வைத்து வெள்ளை முடியை விலக்கினாள்.  அந்த முடி, கையோடு வந்தது.  குயிலி புன்னகை மின்ன நின்றிருந்தாள்.
ஆம், சிவகங்கைக் கோட்டையை உளவு பார்க்க ராணியின் உயிர்த்தோழி குயிலி மாறுவேடத்தில் சென்றாள் என்ற உண்மை வெளிச்சமிட்டு நின்றது.
“என்ன பெரிய மருது, உங்கள் சந்தேகம் தீர்ந்ததா? நாளை மறுநாள் நமது படைகள் போர்முரசு கொட்டட்டும், இந்த முறை ஒலிக்கும் முரசு,
வெள்ளையரின் அடிமை விலங்கை ஒடித்து, விடுதலை வெளிச்சத்தைக் கொண்டுவரும் முரசாக ஒலிக்கட்டும்!” என்றபடியே ராணி சிம்மாசனத்தில் இருந்து குயிலியோடு அந்தப்புரம் நோக்கிச் சென்றார்.
ராணி குறித்ததுபோல படைகள் இரண்டு பிரிவாகப் பிரிந்து, முரசறைந்து போர் முழக்கமிட்டுப் புறப்பட, ராணி வேலுநாச்சியாரின் தலைமையில் பெண்கள்படை சிவகங்கை நகருக்குள் புகுந்தது.  அம்மனுக்கு சாத்தி வழிபட அவர்கள் கையில் பூமாலைகளோடு அணிவகுத்தனர்.
marudhu-brothersபூமாலைக்குள் கத்தியும் வளரியும் பதுங்கி இருந்தது பரங்கியருக்குத் தெரியாது.
வேலுநாச்சியாரும் தனது ஆபரணங்களை எல்லாம் களைந்துவிட்டு சாதாரணப் பெண்போல மாறுவேடத்தில் கோயிலுக்குள் புகுந்தார்.  எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவரோடு  கோட்டைக்குள் இருந்து வெளியேறிய பிறகு, இன்று தான் மட்டும் தனியே மாறுவேடத்தில் வரவேண்டி வந்துவிட்டதே என்றி எண்ணி வேலு நாச்சியார் ஒரு கணம் கலங்கினார்.  ஆனால், ஒரே நொடியில் அந்தக் கலக்கம் காலாவதியானது.  “எனது கணவரை மாய்த்து நாட்டை அடிமைப்படுத்திய நயவஞ்சகரை ஒழிப்பேன்.  விடுதலைச் சுடரை நாடு முழுக்க விதைப்பேன்!” என்ற வீரசபதம் நினைவில் புகுந்தது.
அவரது கண்கள் கோட்டையின் ஒவ்வொரு பகுதியையும் அலச ஆரம்பித்தது.  விஜயதசமி என்பதால் ஆயுதங்கள் அனைத்தையும் கோட்டையின் நில முற்றத்தில் வழிபாடு நடத்த குவித்து வைத்திருந்தனர்.   ஒரு சில வீரர்களின் கையில் மட்டுமே ஆயுதங்கள் இருந்தன.
ராணி கோட்டையை அளவெடுத்தது போலவே குயிலியின் கண்களும் அளவெடுத்தன.  நிலா முற்றத்தில் குவிக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கண்டதும், அவளது மனதில் ஒரு மின்னல் யோசனை தோன்றி மறைந்தது.
ஆனால், அந்த யோசனையை வெளியே சொன்னால் செயல்படுத்த அனுமதி கிடைக்காது என்பதை அறிந்திருந்த குயிலி, மெதுவாக ராணி வேலுநாச்சியாரைப் பிரிந்து கூட்டத்தோடு கலந்துகொண்டாள்.
அதே நேரத்தில் கோட்டையில் பூஜை முடிந்தது.  அனைவரும் கோட்டையை விட்டு வெளியேற ஆரம்பித்தனர்.  பொதுமக்கள் கூட்டமும் மெதுவாக கலையத் தொடங்கியது.  வேலுநாச்சியார் தனது போரைத் தொடங்க இதுவே தருணம் என்பதை உணர்ந்தார்.  அவரது கை மெல்ல தலைக்குமேல் உயர்ந்தது.  மனத்திற்குள் ராஜராஜேஸ்வரியை வணங்கியபடியே, “வீரவேல்! வெற்றிவேல்!!” என்று விண்ணதிர முழங்கினாள்.
அந்த இடிக்குரல் அரண்மனையே கிடுகிடுக்கும் அளவிற்கு முழங்கியது.  ராணியின் குரலோசையைக் கேட்டதும் பெண்கள் படை புயலாய்ச் சீறியது.  புது வெள்ளமாய்ப் பாய்ந்தது.  மந்திர வித்தைபோல பெண்களின் கைகளில் வாளும் வேலும் வளரியும் தோன்றின.
ஆயுதங்கள் அனைத்தையும் மின்னலெனச் சுழற்றி வெள்ளையர்களை சிவகங்கைப் பெண்கள் படை வெட்டிச்சாய்த்தது.  இந்தக் காட்சியை மேல்மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த பார்சோருக்கு இடிவிழுந்தது போலாயிற்று.
sivagangai-palace“சார்ஜ்!..” என்று பான்சோர் தொண்டை கிழியக் கத்தியபடியே, தனது இடுப்பில் இருந்த 2 கைத்துப்பாக்கிகளை எடுத்து சரமாரியாகச் சுட ஆரம்பித்தான்.  வெள்ளைச் சிப்பாய்கள் ஆயுதக் குவியலை நோக்கி ஓடிவர ஆரம்பித்தார்கள்.  சிவகங்கைக் கோட்டைக்குள் பூகம்பம் வெடித்தது.
ராணி வேலுநாச்சியாரின் வாள் மந்திரமாய் சுழன்றது.  ஆயுதமின்றித் தவித்த சிலர் உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பி ஓட்டம் பிடித்தனர்.
வேலு நாச்சியார் பான்சோரைப் பிடிக்க மேல்மாடத்திற்குச் செல்வதற்குள் அங்கிருந்த யாரோ ஒரு பெண் தனது உடல் முழுக்க கொளுந்துவிட்டு எரியும் தீயோடு, “வீரவேல், வெற்றிவேல்” என்று, அண்டம் பொடிபடக் கத்தியபடியே கீழே குதித்தாள்.  அந்தப் பெண் நேராக நிலாமுற்றத்தில் இருந்த ஆயுதக் குவியலில் வந்து விழுந்தாள்.
ஆயுதக் குவியலில் பற்றிய தீயைக் கண்டதும் பான்சோருக்கும், அவனது வீரர்களுக்கும் அஸ்தியில் காய்ச்சல் கண்டது.
பான்சோர் தப்பி ஓட முயன்றான்.  ஆனால் வேலுநாச்சியாரின் வீரவாள் அவனை வளைத்துப் பிடித்தது.  தளபதி சரணடைந்தான்.  கோட்டை மீண்டும் ராணியின் கைக்கு வந்தது.  இதே நேரத்தில் பெரிய மருது உமராதுல் உபராக்கானை விரட்டி அடித்துவிட்டு வெற்றியோடு வந்தார்.
திருப்பத்தூர்க் கோட்டையை வென்ற சின்ன மருதுவும் தனது படைகளோடு வந்து சேர்ந்தார்.  வெற்றி முழக்கம் எங்கும் ஒலித்தது.  ஆனால் வேலுநாச்சியாரின் கண்கள் மட்டும் கூட்டத்தை அளவெடுப்பது போல சுற்றிச் சுற்றி வந்தன.
போர் தொடங்கிய போது குயிலின் எண்ணம் ஆயுதக் கிடங்கின் மேல் நின்றது.  அப்போது அவள் எண்ணினாள், “நமது விடுதலைக்கான இறுதிப்போர் இது.  இதில் நாம் தோல்வி அடைந்தால் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வெற்றி பெற முடியாது.  நான் வெற்றிக்கு வழிகாட்ட ஒளியூட்டப் போகிறேன். என்னைத் தடுக்காதே,” என்று கூறியபடியே உடல் முழுவது நெய்யில் குளித்தபடி கோயிலில் இருந்த பந்தத்தோடு அரண்மனையின் உப்பரிகையை நோக்கிப் பறந்தாள்.
அரண்மனை உப்பரிகையை அடைந்ததும் தீப்பந்தத்தால் தனது உடலில் தனக்குத்தானே தீவைத்துக்கொண்டு, அந்த ஆயுதக் குவியலில் குதித்து விட்டாள்.  வெள்ளையர்களை ஆயுதம் அற்றவர்களாக்கி நமக்கு வெற்றியை அள்ளித்தர, …. தன்னையே பலியிட்டுக்கொண்டாள்.
மானம் காக்கும் மறவர் சீமையின் விடுதலைக்காக தன்னையே பலிகொடுத்த அந்தத் தியாக மறத்திக்காக வேலுநாச்சியாரின் வீர விழிகள் அருவியாய் மாறின.  கண்ணீர் வெள்ளம் அவரது உடலை நனைத்தது.
அவர் மட்டுமா அழுதார்? குயிலிக்காக சிவகங்கைச் சீமையே அழுதது.  குயிலி போன்ற தியாகச்சுடர்கள் தந்த ஒளியின் ஒட்டுமொத்தக் கூட்டுத்தொகைதான் இந்தியாவிற்கு விடுதலை வழிகாண வைத்தது.  தங்கள் உடலையே எரிபொருளாக்கிய எத்தனையோ குயிலிகள் இன்னும் சரித்திரம் ஏறாமலேயே சருகாய்ப் போனார்கள்.  அவர்களது உன்னத தியாகத்திற்குத் தலைவணங்குவோமாக!

சாதி அடையாளம் தேவையா?

வழக்கமாக என்னை இணையத்தில் தொடர்புகொள்ளும் சொந்தங்கள், நாம் நம்மை சாதியால் அடையாளப்படுத்திக் கொள்வது சரியா அண்ணா, இது மற்றவர்களை புண்படுத்தாதா என்று கேட்கிறார்கள். நான் அவர்களிடம், ஒரு தலித் தன்னை தலித் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார், ஒரு இஸ்லாமியர் தன்னை இஸ்லாமியர் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார், ஒரு கிறிஸ்தவர் தன்னை கிறிஸ்தவராக அடையாளப்படுத்திக் கொள்கிறார். இது யாரையும் புண்படுத்தாதா என்று கேட்கிறேன். அதன் பின் ஆம் என்று ஒப்புக்கொள்கின்றனர். இதனைக் கொஞ்சம் ஆராய்வோம்.
முத்துராமலிங்கத் தேவருக்குப் பின் ஒரு வலிமையான தலைவர் இல்லாத காரணத்தால் நம் சமுதாய மக்கள் திராவிடக் கட்சிகளில் சேர ஆரம்பித்தனர். அவர்கள் திராவிடர்களின் பேச்சைக் கேட்டனர். அவர்கள் சொல்வதே உண்மை என்று நம்ப ஆரம்பித்தனர்.
ராமசாமி நாயக்கரின் கொள்கையின்படி சாதியை ஒழிக்க வேண்டும், அதுவே தமிழரின் விடுதலைக்கு பயன்படும் என்று சொன்னார். இவருக்கு எப்போது இந்த ஞானோதயம் பிறந்தது? காசியில் பிராமணர்கள் சாப்பாடு தராத காரணத்தால் எச்சில் இலைகளை பொறுக்கிச் சாப்பிட நேர்ந்தபோது இந்த ஞானோதயம் பிறந்தது. அதன் பின் அவர் பிராமணர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை துவக்கினார்.


அவர் சாதிக் கட்டமைப்பை பிராமணர்கள் உருவாக்கியதாவும், இந்து மதம் அதை வளர்த்து வருவதாகவும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். இந்த பிரச்சாரத்தில் வந்தவர்கள்தான் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் போன்றோர். எனவே சாதியை அடையாளப்படுத்திக் கொள்வது அநாகரீகமான செயல் என்று போதிக்கப்பட்டது. இதை இன்று நம் சமுதாயத்தைச் சேர்ந்த படித்தவர்கள் மட்டுமல்லாது தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து சாதி மக்களும் நம்புகின்றனர்.
ஆனால் உண்மையில் இது பொய்யான நிலை ஆகும். மக்கள் தன்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற காரணத்தால்தான் ராமசாமி நாயக்கரால் தேர்தல் அரசியலுக்கு வர முடியவில்லை. ஆனால் அவரது சிஷ்யர்கள் தேர்தல் அரசியலுக்கு வந்தனர். அவர்களுக்கு நன்றாகத் தெரியும் சாதி – மதம் பற்றி பேசினால் நமக்கு வாக்கு விழாது என்று. எனவே அவர்கள் ராமசாமி நாயக்கரின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டனர். மேடை நாகரீகத்திற்காக மட்டும் அதைப் பேசிக் கொண்டனர். ஆனால் உண்மையில் சாதியை வைத்தே அரசியல் செய்ய ஆரம்பித்தனர்.
இதில் அவர்களுக்கு ஜால்ராப் போடும் போலிச் சாதித் தலைவர்களே பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதனால்தான் தமிழரின் உரிமைகள் அனைத்து முனைகளிலும் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படும்போது வேடிக்கை பார்க்கும் நிலை ஏற்பட்டது.
உண்மையில் பண்டையத் தமிழகத்தில் சாதி வேறுபாடு இருந்தாலும் அனைத்துச் சாதியினரும் மற்றவர்கள் என்ன சாதி என்று அறிந்தே பழகி வந்தனர். இதுவே நமது வரலாறு காட்டும் உண்மை. ஆனால் இந்த போலித் திராவிட அரசியல்வாதிகள் காரணமாக தமிழன் சாதியை விட்டதாக நடித்துக் கொண்டு உண்மையில் சாதியை விடமுடியாத நிலையில் இருதலைக் கொள்ளி எறும்பாக இருந்து வருகிறான்.
சாதியை மறைப்பது நாகரீகம் என்று கருத ஆரம்பித்த காரணத்தால்தான் தமிழகத்தில் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் ஆட்சிக்கு வர முடிந்தது. இதே நிலை தொடர்ந்தால் ஒரு ரெட்டியாரோ, ஒரு மார்வாடியோ ஆட்சிக்கு வரலாம். சாதிப்பெயரை மறைக்கச் சொல்லும் இவர்கள் மதப் பெயரை கண்டுகொள்வதில்லை. அதாவது சாதிப் பெயர் பிரிவினையை ஏற்படுத்துமாம். மதம் அப்படிச் செய்யாதாம். என்னே ஏமாற்று வேலை?
தமிழகத்தில் மட்டுமே இந்த போலி நிலையை பார்க்க முடிகிறது. இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் உள்ளவர்கள் மற்றவர்கள் என்ன சாதி என்று அறிந்தே பழகுகிறார்கள். அவ்வளவு ஏன் இந்த நாட்டின் பிரதமரும், ஜனாதிபதியும் கூட தன் பெயருடன் சாதிப் பெயரை சேர்த்து எழுதி வருகிறார்கள். அதை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் நாம் சாதிப் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று பொய்யான பாடம் நமக்கு புகட்டப்பட்டுள்ளது.  எனவே அதை நாம் கண்டுக் கொள்ளத் தேவையில்லை.
சாதி ஒழிப்பு என்பது சாத்தியமில்லாதது. அதுவும் இந்தியா முழுவதும் சாதி இருக்கும்போது தமிழ்நாடு என்ற ஒரு மாநிலத்தில் மட்டும் சாதியை ஒழிக்க முடியவே முடியாது. தமிழகத்திலும் கூட எந்த சாதியும் தங்கள் சாதியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. இதில் முதல் வரிசையில் நிற்பவர்கள் தலித்கள் ஆவர். தங்களை முற்போக்குவாதிகள் என்று விளம்பரப்படுத்திக் கொள்ளும் இவர்கள் உண்மையில் தங்கள் சாதியை ஒழிக்கத் தயாராக இல்லை. மற்றவர்களின் சாதியை மட்டுமே ஒழிக்கச் சொல்கிறார்கள்.
எனவே இந்த பொய்யான சாதி ஒழிப்பு நாகரீகத்தை நம் சமுதாயத்தைச் சேர்ந்த படித்தவர்கள் பின்பற்றக் கூடாது. தைரியமாக நான் கள்ளர், மறவர், அகமுடையார் என்று சொல்ல வேண்டும். அது அநாகரீகம் அல்ல.
அனைத்து சலுகைகளுக்கும் சாதியைப் பயன்படுத்திக்கொண்டு மேடையில் சாதியை ஒளித்து வைத்துக்கொள் என்று பேசுபவர்களின் பின்னால் நாம் போகத் தேவையில்லை. அதனால் நமக்கும் நம் சந்ததிக்கும் நன்மை இல்லை. எனவே சாதிப்பெயரை தைரியமாக பயன்படுத்துங்கள். சாதிகளை அறிந்தே நாம் நட்புகொள்ள முடியும். அவ்வாறே நாம் எல்லா மக்களுடனும் பழகுவோம்.

மருதுபாண்டிய மன்னர்களின் வரலாறு

வாஸ்கோட காமா கடல்வழிப் பயணமாக மேற்குக் கடற்கரையில் உள்ள கள்ளிக்கோட்டைக்கு அருகில் 20-5-1498ல் முதன்முதலில் வந்த பின்னர்தான், ஐரோப்பியர்கள் தென் இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலும், கிழக்குக் கடற்கரையிலும் வணிக நிமித்தமாக வரத் தொடங்கினார்கள்.
வணிக நிமித்தமாக வந்த ஐரோப்பியர்கள் இங்குள்ள அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, கொஞ்சம், கொஞ்சமாக இந்தப் பகுதியின் ஆட்சியையும், அதிகாரத்தையும், கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஐரோப்பியர்களில் குறிப்பாக ஆங்கிலேயர்கள் பிரெஞ்சு, டச்சு, போர்ச்சுகீஸ் போன்ற  ஐரோப்பிய நாட்டவர்களைக் குறிப்பிட்ட சில எல்லைக்குள் கட்டுப்படுத்தி, பெரும்பாலான பகுதிகளைத் தங்களது ஆளுமைக்குள் கொண்டு வந்தனர்.

தென்னிந்தியப் பகுதிகளில் வலு இழந்திருந்த ஆற்காட்டு நவாப்பையும், சிற்றரசர்களையும், பாளையக்காரர்களையும் வெடிகுண்டு, பீரங்கி, துப்பாக்கி போன்ற நவீன ஆயுத பலத்தால் தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். சில பகுதிகளில் அவர்களின் வாரிசு உரிமைகளிலும் தலையிட்டு தீராத உட்பகை உருவாவதற்கும் காரணமாக  இருந்தார்கள்.

ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுகிற உணர்வும், ஊக்கமும், உத்வேகமும்
பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியிலேயே உருவாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து ஆங்கிலேயருக்கு எதிரான பல்வேறு கிளர்ச்சிகளும் ஆயுதப் போராட்டங்களும் தமிழ்நாட்டிலும், இந்தியாவின் தென்பகுதியிலும், நடைபெற்றதை யாரும் மறுக்க இயலாது. சொல்லப்போனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான முதல் குரல் தென்னகத்திலிருந்துதான் எழுந்தது என்பது சரித்திரம் மறைத்துவிட்டிருக்கும் மறுக்க முடியாத உண்மை.
ஆனால், இந்தக் கிளர்ச்சிகளும் ஆயுதப் போராட்டங்களும், தங்களின் ஆட்சி, அதிகாரத்துக்கு ஆபத்து வந்தபொழுது ஏற்பட்டவை என்பதால் இவை மக்கள் விடுதலைக்கான போராட்டங்களாகவும், நாடு தழுவிய ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களாகவும் அமையவில்லையென இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழு (​IC​HR​ –  Indi​an Coun​cil of Histori​c​al Rese​ar​ch) கருத்துத் தெரிவிக்கிறது. இது அறியாமையின்பாற்பட்ட, உண்மை நிலைமை உணராத கூற்று என்பதை நம்மில் யாரும் ஏன் குரலெழுப்பி மறுக்கவில்லை என்பதுதான் வியப்பாக இருக்கிறது.
1800-1801ம் ஆண்டில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் தலைமையிலும், வழிகாட்டுதலிலும் உருவான புரட்சியும், போராட்டங்களும் தமிழ்நாட்டிலும், மலபார், கர்நாடகப் பகுதி வரையிலும் பரவி, குவாலியர் வரையிலும் எட்டியிருந்தது. இந்த ஆங்கிலேயருக்கு எதிரான ஆயுதம் ஏந்திய மக்கள் புரட்சியை இந்திய வரலாற்று ஆய்வுக்குழு (IC​HR)​ ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன் என்பதுதான் புதிராக இருக்கிறது.
அவர்களுக்கு இந்த மாமன்னர்களின் சுதந்திர வேட்கையும், மக்களை ஆங்கிலேய
ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக அணிதிரட்டும் முயற்சியும் தெரியாமல்
போனதா?

இந்திய வரலாற்றில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் தலைமையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அனைத்துத் தரப்பு மக்களும் போர்க்களம் கண்ட அரிய, தீரமிக்க நிகழ்ச்சியை இந்திய மண்ணில் நிகழ்ந்த முதல் சுதந்திரப் போராட்டம் அல்ல என எந்தச் சூழ்நிலையிலும் மறுத்துவிட இயலாது.
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் (1800 -1801) நடைபெற்ற இந்த ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சி, ஏன் உரிய முறையில், இந்திய வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை என்பதுதான் இன்றும் புதிராகவே உள்ளது.
இந்தியாவின் தென்பகுதியில்தான் ஆங்கிலேயர்கள் முதன்முதலில் அடியெடுத்து
வைத்தார்கள். பின்னர்தான் கொல்கத்தா சென்றார்கள்.எனவே, ஆங்கிலேயர்கள் முதன்முதலாக அடியெடுத்து வைத்த இந்தத் தென்பகுதியில் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடைபெற்ற ஆயுதம் தாங்கிய மக்கள் புரட்சியை முதல் சுதந்திரப் போராட்டமாகப் பதிவு செய்யாமல், இதற்குப் பின்னர் ஐம்பத்தாறு ஆண்டுகள் கழித்து வடக்கே நடைபெற்ற சிப்பாய்க் கலகத்தை (sepoy mutiny)​ இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் எனப் பதிவு செய்வது எந்த வகையில் நியாயம்…?

இத்தகைய சரித்திரப் பதிவு தென்பகுதி மக்களின் உச்சபட்ச தியாகத்தையும், போராட்டத்தையும் சிறுமைப்படுத்திவிட்டதாகவே கருத வேண்டி இருக்கிறது. இந்த உண்மை நிலைமைகளை வெளிப்படுத்துவதால், 1857ம் ஆண்டு நடைபெற்ற
ஆங்கிலேயர் எதிர்ப்புப் போராட்டத்தைச் சிறுமைப்படுத்துவதாகக் கருதக்கூடாது. ஆனால், சரித்திர நிகழ்வுகளை காலத்தவறின்றி (​Chronologi​c​al re​cording)​ வரிசைப்படுத்திப்  பதிவு செய்ய வேண்டும் என்பது சரித்திர ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைக் கோட்பாடாகும்.
தவறான பதிவை நாம் திருத்தி எழுதியாக வேண்டும். தமிழன் செய்த தியாகம் பதிவு செய்யப்படாமல் மறைக்கப்படுவதை நாம் வாய்மூடி அங்கீகரிப்பது ஏன்? இதில் சில சரித்திர ஆசிரியர்களும், இந்திய சரித்திர ஆராய்ச்சிக் குழுவும் (IC​HR)​ தவறிழைத்துவிட்டதாகவே கருத வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சார்ந்த புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் இராஜய்யன்தான் தன்னுடைய வரலாற்று நூலான “தென்னாட்டுக் கிளர்ச்சிகள்” (South Indian Rebellion:- The first war of Independence, 1800 – 1801) என்கிற ஆங்கில வரலாற்று நூலில் இதுபற்றி சரியாகப் பதிவு செய்துள்ளார்.
அதுமட்டுமல்ல, இந்தக் கிளர்ச்சியும், புரட்சியும்தான் இந்தியாவின் முதல் சுதந்திரப்  போராட்டமாக அறிவிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும்  தொடர்ந்தார். (ர.ட.சர். 36714/2006) பின்னர் தீர்ப்பின் அடிப்படையில் இந்திய வரலாற்று ஆய்வுக் குழுவினரிடம் (ICHR)​ தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்.
அந்த ஓய்வறியாத வரலாற்றுப் பேராசிரியர் இராஜய்யனை, மாமன்னர்
மருதுபாண்டியர்கள் நினைவு நாளில், வாழ்த்துவதும், வணங்குவதும் தமிழ்
மக்களின் கடமையாகும்.

இந்திய சரித்திர ஆராய்ச்சிக் குழு (IC​HR)​1800 – 1801ம் ஆண்டில் நடைபெற்ற ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சி பற்றியும், ஆயுதப் போராட்டங்கள் பற்றியும், போராடியவர்களின் நோக்கங்கள், சிந்தனைகள், தேசியப்பற்று, இந்திய ஒற்றுமை, மதச்சார்பற்ற தன்மை ஆகியவற்றை ஆழ்ந்து பரிசீலிக்கவில்லை என்றே அறிய முடிகிறது.
1800 – 1801ம் ஆண்டில் ஆங்கிலேய எதிர்ப்புப் போராட்டத்தின் உச்சகட்டமாக,
ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக மாமன்னர் மருதுபாண்டியர்கள், திருச்சி
மலைக்கோட்டை ஆற்காடு நவாப்பு அரண்மனை வாயிலிலும், திருவரங்கம் கோயில்
வாசலிலும் 1801ம் ஆண்டு ஜூன் 16ம் நாள் ஒட்டிய போர் பிரகடனம் (War De​cl​
ar​ation) வரலாற்றில் பிரசித்தி பெற்றதாகும்.

ஆங்கிலேயருக்கு எதிரான இந்த யுத்தப் பிரகடனத்தில் மருதுபாண்டியர்கள், ஜாதி, மதம், பிராந்தியம் ஆகிய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்து மக்களும் ஆயுதமேந்தவும் வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடவும் தயாராக வேண்டுமென அழைப்பு விடுக்கிறார்கள்.
தன்னுடைய ஆளுகைப் பகுதிக்காகவோ அல்லது தன்னிடம் நட்புக் கொண்டவர்களுக்காகவோ மட்டும் அவர்கள் போராடவில்லை. மாறாக, இந்த மண்ணுக்கும், தங்கள் தங்கள் பகுதிக்கும் உரிமை பெற்றவர்களுக்கும் சேர்த்தே போராடத் தயாரானார்கள் என்பதுதான் சரித்திர உண்மை. அவர்களது உரிமைகளை மீட்டுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
தங்களது போராட்டங்களுக்கு ஆதரவளிக்காதவர்களைக்கூட, அவர்கள் கலந்துகொள்ள
வேண்டும் என மருதுபாண்டிய மன்னர்கள் வற்புறுத்தவில்லை. மாறாக, அவர்கள்
யுத்த களத்துக்குச் செல்லும் தங்களை வாழ்த்தினால் மட்டும் போதும் எனத்
தெரிவிக்கிறார்கள்.
ஆங்கிலேயர்களின் அத்துமீறிய நடவடிக்கைகளால் நாட்டு மக்கள் பசி, பட்டினியால் வாடுகிறார்கள், பசிக்குச் சோறு இல்லாமல் சோற்றுக் கஞ்சியே சாப்பிடுகிறார்கள், நம்முடைய கலாசாரமும், பண்பாடும் சீரழிந்து கொண்டிருக்கிறது என நாட்டு மக்களுக்குப்  பிரகடனப்படுத்தினார்கள் சிவகங்கைச் சீமையை ஆண்ட அந்தக் குறுநில மன்னர்கள்.
இந்தியாவின் தென்கோடி முனையிலிருந்து குவாலியர் வரையிலும், தூதுவர்களை
அனுப்பி ஆங்கில எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினார்கள். போர்ப் பிரகடனத்தின் இறுதியில் ஆங்கிலேயர்களின் “அசைக்க முடியாத எதிரி” என்றுதான் கையொப்பமிடுகிறார்  மன்னர் மருது.
இத்தகைய அம்சங்களைக் கொண்ட ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு போர்ப்பிரகடனம்
பதினெட்டாம் நூற்றாண்டிலோ அல்லது பத்தொன்பதாம் நூற்றாண்டிலோ ஆங்கில
ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் பதிவு செய்யப்படவில்லை என்பதே உண்மையாகும்.
மாமன்னர் மருதுபாண்டியர்களால் அறிவிக்கப்பட்ட இந்தப் போர்ப் பிரகடனம்
பற்றிய செய்தியையும், ஆங்கிலேயர்கள் மருதுபாண்டியர்களையும் அவர்களது
வாரிசுகளையும், சிறுவர்கள் என்றுகூடப் பார்க்காமல் போராளிகள் 500 பேருடன்
திருப்பத்தூர் கோட்டையில் கொடூரமாகத் தூக்கிலிட்ட துயரமான செய்திகளையும்,
அப்பொழுது இங்கு பணியாற்றிய இராணுவ அதிகாரி ஒருவர் மூலம் அறிந்து, அவரது
வேண்டுகோளின்படி 1813ம் ஆண்டு இங்கிலாந்தில், ஜே.கோர்லே என்பவர்
புத்தகமாக வெளியிட்டுள்ளார். (M​A​H​R​A​DU AN IN​D​IAN ST​O​RY OF THE
BE​G​I​N​N​I​NG OF THE NI​N​E​T​E​E​N​TH CE​N​T​​URY By J.GO​U​R​L​AY )
இந்தப் புத்தகத்தில், மருதுபாண்டியர்களின் குடும்பத்தாரையும், சிறுவர்களையும் போராளிகள் 500 பேரையும் ஆங்கில இராணுவத்தினர், எந்தவிதமான அடிப்படை வழிமுறைகளையும் பின்பற்றாமல் கொடூரமாகத்  தூக்கிலிட்டுக் கொன்றார்கள் என்கிற கொடுமையான செய்தியை இராணுவ அதிகாரி என்பதால் என்னால் வெளி உலகத்துக்குத் தெரிவிக்க முடியாது.
எனவே, தாங்களாவது  உலகத்துக்குத் தெரிவியுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு ஏற்பத்தான், இந்த நூலை வெளியிடுகிறேன் என்று நூலாசிரியர் ஜே.கோர்லே முன்னுரையில் தெரிவிக்கிறார்.
மேலும் மாமன்னர் மருதுபாண்டியர்களின் போர்ப் பிரகடனத்தைக் குறிப்பிடுகிறபொழுது,  கி.பி.85ல் ரோமானியத் தளபதி அக்கிரிகோலா இங்கிலாந்து நாட்டை முற்றுகையிட்டிருந்த நிலையில் பிரிட்டானியப் படைகளை ஒருங்கிணைத்து, ரோமானிய ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்துப் போர்க்களத்தில் அணிவகுத்து நின்ற பிரிட்டானியப் படையிடம், ஆற்றல்மிக்க தளபதிகளில் ஒருவரான கால்காகஸ் (A.D.85 Calg​a​cus’ spe​ech to his troops)​ தன்னுடைய படை வீரர்களைப் பார்த்து வீரம் செறிந்த உரை நிகழ்த்துகிறான்.
உணர்ச்சிப் பிரவாகமாக மாறுகிறது பிரிட்டானியப் படை. அந்த வீரம் செறிந்த உரைக்கு மருதுபாண்டியர்களின் போர்ப் பிரகடனத்தை நூலாசிரியர் ஒப்பிடுகிறார். அதுமட்டுமல்ல, உலகம் முழுவதும் நேர்மையும், நெஞ்சுரமும், விடுதலை வேட்கையும், நாட்டுப்பற்றும் கொண்ட மாவீரர்கள் ஒரே மாதிரியாகத்தான் சிந்திக்கிறார்கள் என்பதற்கு மருதுபாண்டியர்களின் போர்ப் பிரகடனத்தையும், பிரிட்டானியத் தளபதி கால்காகஸ் இராணுவ வீரர்களிடம் ஆற்றிய உரையையும் அவர் ஒப்பிடுகிறார்.
1813ல் ஆங்கில நாட்டைச் சேர்ந்த ஜே. கோர்லே மருதுபாண்டியர்களின் போர்ப்
பிரகடனத்தை கி.பி. 85ம் ஆண்டில் பிரிட்டானியத் தளபதியின் உரைக்கு ஒப்பிட்டு இருவரின் சுதந்திர வேட்கையையும், நாட்டுப் பற்றையும், நெஞ்சுரத்தையும் பாராட்டி அந்தச் செய்தியை உலகம் அறிய வேண்டும் என்பதற்காகப் பதிவு செய்கிறார்.
ஆனால், இந்தியாவில் உள்ள இந்திய வரலாற்று ஆய்வுக் குழு (IC​HR)​ 1800 – 1801ல் நடைபெற்ற ஆங்கில எதிர்ப்புப் போராட்டத்தை முறைப்படி அங்கீகரித்துப் பதிவு செய்ய மறுக்கிறது.
வேதனையானது, வினோதமானது, வேடிக்கையானது என்றெல்லாம் கூறுவதைவிட மாமன்னர் மருதுபாண்டியர்கள் தமிழர்களாகப் பிறந்ததுதான் இதற்குக் காரணமானது
என்றுதான் நம்மால் கூறமுடிகிறது. எந்தநாடு இந்தச் செய்தியை இருட்டடிப்புச் செய்யும் என்று எதிர்பார்த்தோமோ அந்த நாட்டில் இந்தச் செய்தி உரிய முறையில் வெளியாகி உள்ளது.
ஆனால், எந்த நாட்டில் இந்தச் செய்தி அங்கீகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட
வேண்டுமோ அந்த நாட்டில், இந்தியத் திருநாட்டில், இந்தச் செய்தி இருட்டடிப்புச் செய்யப்படுகிறது. தென்னகத்துத்  தியாக வேள்வியை இரும்புத்திரை போட்டு மறைக்கும் இந்த முயற்சியை நாமும் முறியடிக்க மனமில்லாமல் மௌனம் சாதிக்கிறோம்.
இன்று மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவு நாள் (October 24 (அ) 27,1801).
இந்த மண்ணை நேசிக்கும்,ஏன், இந்த மண்ணின் சுதந்திரம் பறிக்கப்பட்டால், உயிரைத் துச்சமென மதித்துப் போராடும் மருதுபாண்டியர்களின் வழிவந்தவர்களின் உணர்வுகள் முற்றிலும் மறைந்து போய்விடவில்லை. அவர்கள் சார்பாக தெரிவிப்பதெல்லாம், மாமன்னர் மருதுபாண்டியர்களின் நிகரற்ற, உலகம் போற்றும் வீரத்தை போர்க்களத்தில் எதிர்கொண்ட ஆங்கில இராணுவத்தின் தளபதி ஜெனரல் வெல்ஸ் மனம் திறந்து பல படப் பாராட்டினார் – பதிவும் செய்து வைத்திருக்கிறார். (Milit​ary Reminis​cen​ces of Gen.​ Welsh)
அவர்களின் உயர்ந்த நாட்டுப்பற்றையும், வீரத்தையும், விவேகத்தையும் சுயமரியாதையையும் கி.பி. 85ம் ஆண்டில் வாழ்ந்த பிரிட்டானியத் தளபதியின்
உரையோடு ஒப்பிட்டுப் பாராட்டுகிறார் ஆங்கில நாட்டைச் சார்ந்த நூலாசிரியர்
கோர்லே.
எப்படி உதயசூரியனைத் திரையிட்டு மூடமுடியாதோ, அதேபோல, மருதுபாண்டிய
மன்னர்களின் வீரத்தையும், விடுதலை உணர்வையும், நாட்டுப்பற்றையும்,சுயமரியாதை உணர்வையும் இந்திய வரலாற்று ஆய்வுக் குழுவல்ல, எந்த ஆய்வுக் குழுவாலும் மறக்கடிக்க முடியாது.

மக்களின் சுவாசத்துடனும், மண்ணின் மணத்துடனும் கலந்துவிட்ட வீர வரலாறு,
இந்திய சுதந்திரத்துக்கு முதல் குரல் எழுப்பிய மருதுபாண்டிய மன்னர்களின்
வரலாறு!

மருது பாண்டியர் மறைக்கப்பட்ட உண்மைகள்

-பி.ஏ. கிருஷ்ணன்

“நான் இந்தப் பக்கங்களில் கூறியிருக்கும் நிகழ்வுகள் பன்னிரெண்டு, பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ராணுவ அதிகாரி ஒருவரால் என்னிடம் கூறப்பட்டவை. அவர் நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்.
என்னிடம் அவர் சொன்னது இது: ‘உன்னால் இந்த உண்மைக் கதையை உலகத்திற்குச் சொல்ல முடியும். என்னால் முடியாது.’ ”
இது கோர்லே என்னும் ஆங்கிலேயர் எழுதிய புத்தகத்தின் தொடக்கம். இந்தப் புத்தகம் 1813இல் எழுதப்பட்டது. மருது பாண்டியரின் கதையைச் சொல்வது. (எனக்குத் தெரிந்த அளவில்) வரலாற்று ஆசிரியர்களின் பார்வையில் இன்றுவரைக்கும் படாதது. பதிப்பாளர் அகப்படாததால் (அல்லது பதிப்பிக்க மறுத்ததால்) அவராலேயே பதிப்பிக்கப்பட்டது.

புத்தகத்தின் பெயர்: Mahradu- An Indian Story of the Beginning of the Nineteenth Century – With Some Observations on the Present State of the British Empire and Chiefly of its Finance.. லண்டனில் பதிப்பிக்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் விலை நான்கு ஷில்லிங்குகள்.
புத்தகம் எழுதப்பட்டிருக்கும் விதம் படிப்பவர்களையும் படிக்கத் தான் வேண்டுமா என்று யோசிக்கவைக்கும். நமது கழக எழுத்தாளர்களையே வியக்கவைக்கும் அளவிற்கு, ஒவ்வொரு வாக்கியமும் ஒரு பக்கத்திற்கு மேல். முதற்பகுதி மருது பாண்டியரைப் பற்றி. பின்பகுதி பிரித்தானியப் பேரரசின் வரவு செலவு விவகாரங்களைப் பற்றி.
உண்மையைச் சொல்ல வேண்டும், இதுவரை சொல்லாததைச் சொல்ல வேண்டும் என்னும் ஆசிரியரின் ஆர்வம் புத்தகத்தின் முதற்பகுதியில் வெளிப்படுகிறது. அவர் சொல்லும் உண்மை அதிரவைக்கும் உண்மை. இதுவரை வெளிவராத உண்மை. ஒரு அழித்தொழிப்பைப் பற்றிய உண்மை.
பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழகத்தைப் பற்றிப் பேசும் அனைவரும் மருது சகோதரர்களை வென்றது பற்றியும் அவர்கள் தூக்கிலிடப்பட்டது பற்றியும் குறிப்பிடத் தவறுவதில்லை. கர்னல் வெல்ஷ் தனது “இராணுவ நினைவுகள்” நூலில் மருது சகோதரர்களுடன் நடந்த போரைப் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார்.
கட்டபொம்மன் வெள்ளையரை எதிர்த்துப் போர் புரிந்ததற்குக் காரணம் இருந்தது. ஆனால் மருது போர் புரிந்ததற்குக் காரணம் ஏதும் இல்லை என்று சொல்லும் அவர், மருதுவின் வீரர்கள் பாஞ்சாலங்குறிச்சி வீரர்களைப் போலப் போர் புரியவில்லை என்கிறார்.
Indeed twenty thousand Panjalumcoorcheers would have been invincible in his country.
“இருபதாயிரம் பாஞ்சாலங் குறிச்சிக்காரர்கள் இவரது நாட்டில் இருந்திருந்தால், அவர்கள் வெல்ல முடியாதவர்களாக இருந்திருப்பார்கள்.”
தனக்கும் மருது சகோதரர்களுக்கும் உள்ள தோழமையைப் பற்றி வெல்ஷ் இவ்வாறு கூறுகிறார்.
“(இருவரில்) மூத்தவரின் பெயர் வெள்ளை மருது. இவருக்கும் அரசாளுவதற்கும் தொடர்பே கிடையாது. இவர் பெரிய வேட்டைக்காரர். வாழ்வு முழுவதையும் சுற்றித் திரிந்தே கழித்தவர். ஒப்பற்ற உடல் வலிமை கொண்ட இவர் ஆர்க்காட்டு ரூபாயைத் தனது விரல்களால் வளைக்கக்கூடியவர்.
ஐரோப்பியர்களால் மிகவும் மதிக்கப்பட்டவர். புலி வேட்டையில் முதலில் நின்று புலியைக் கொல்வது இவர்தான். இவரது தம்பி சின்ன மருது சிறுவயதிலிருந்து அரசாண்டவர். அவரது தலையசைப்பையே சட்டமாக மதித்தனர் அவரது மக்கள். அவரது அரண்மனையில் ஒரு காவலாளிகூடக் கிடையாது. யாரும் உள்ளே செல்லலாம், வெளியே வரலாம்.”
தனக்கு வேல் பிடிக்கவும் களரிக் கம்பு வீசவும் கற்றுக்கொடுத்தது சின்ன மருதுதான் என்று கூறும் வெல்ஷ், ஒரு மிருகத்தைப் போல அவர் வேட்டையாடப்பட்டதையும் தொடையில் காயப்பட்டு, காலொடிந்து சிறைப்பட்டதையும் சாதாரணக் குற்றவாளியைப் போலத் தூக்கிலிடப்பட்டதையும் மனவருத்தத்தோடு கூறுகிறார்.
வெல்ஷின் கூற்றுப்படி, சின்ன மருதுவின் கடைசி மகனைத் தவிர அவரது குடும்பத்தவர் அனைவரும் வெள்ளையரால் தூக்கிலிடப்பட்டனர். கடைசி மகன் துரைசாமிக்கு அப்போது வயது பதினைந்து. பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்.
“தூத்துக்குடியில் இருந்த இராணுவ அணிக்கு நான் தலைமை தாங்க அனுப்பப்பட்டேன். கலகத்தில் ஈடுபட்டதால் நாடுகடத்தல் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அங்குதான் இருந்தார்கள். அங்குதான் எனக்கு என் பழைய நண்பர் சின்ன மருதுவின் மகன் துரைசாமியின் விலங்குகளைத் தளர்த்தும் வாய்ப்பு – எனது நெஞ்சை உருகவைக்கும் வாய்ப்பு – கிடைத்தது. அவரது காவல் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்ததால், என்னால் அவரைத் தப்பவைக்க முடியவில்லை.”
உரிய மரியாதையுடன் அவரை நடத்த ஆணையிட்ட வெல்ஷ், பதினேழு வருடங்கள் கழித்து அவரைத் திரும்பப் பினாங்கில் மிகவும் தாழ்ந்த நிலையில் சந்தித்ததையும் தனது நினைவுகளில் குறிப்பிடுகிறார்.மருதுவின் குடும்பத்தினர் தூக்கிலிடப்பட்டதாகக் கூறும் வெல்ஷ் சிறுவர்கள் தூக்கிலிடப்பட்டதாகக் குறிப்பிடவில்லை.
ஊழலில் பிறந்து ஊழலிலேயே வளர்ந்ததாகக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசைக் குற்றஞ்சாட்டும் கோர்லே இவ்வாறு கூறுகிறார்;
“இது (இந்த அரசு) திறமையின் சாயலைக்கூட வெறுப்பது; ஏனென்றால் திறமை ஊழலின் எதிரி என்று அதற்குத் தெரியும். இந்த அரசு தாங்கிப் பிடிப்பது அதிகாரத்தை – வரைமுறையற்ற, கீழ்த்தரமான அதிகாரத்தை -ஏனென்றால் அதிகாரத்தால் மட்டுமே தன்னால் நிலைத்து நிற்க முடியும் என்று அதற்குத் தெரியும்.”
கோர்லே தனது புத்தகத்தில் மருதுவின் புகழ்பெற்ற திருவரங்கம் அறிக்கையை முழுவதுமாக வெளியிட்டிருக்கிறார். இந்த அறிக்கையைப் பற்றி நான் எனது ‘புலிநகக் கொன்றை’யில் குறிப்பிட்டிருக்கிறேன். விடுதலை வேண்டி அடிமனத்தின் ஆழத்திலிருந்து குரல் கொடுக்கும் இந்த அறிக்கை கோர்லேயையும் மிகவும் பாதித்திருக்கிறது.
இந்த அறிக்கையைக் கி பி முதல் நூற்றாண்டில் ஜூலியஸ் அக்ரிகோலாவின் தலைமையில் நிகழ்ந்த ரோமானியப் படையெடுப்பிற்கு எதிராகக் கால்ககஸ் (Calgacus/Galgacus) என்ற கலடோனியத் (வட ஸ்காட்லாந்து) தளபதி நிகழ்த்திய பேருரைக்குக் கோர்லே ஒப்பிடுகிறார்.
“மனித இயல்பு எங்கேயும் ஒன்றுதான். எங்கெங்கெல்லாம் இறைவனால் தன்மானம் சிறிதளவாவது அளிக்கப்பட்டிருக்கிறதோ அங்குள்ளவர்களின் உணர்வுகள் ஒன்றாக இருக்கும் – அவை காலங்களையும் எல்லைகளையும் கடந்தவை. மருதுவின் அறிக்கையின் நோக்கம் அவரை நசுக்குபவர்களைக் கொடுங்கோலர்களாகவும் கூலிப்படைகளாகவும் உண்மையான வீரர்களின் அடிப்படைத் தன்மைகளான பரந்த மனமும் உயர்ந்த உள்ளமும் அற்றவர்களாகவும் சித்தரிப்பதுதான். கால்ககஸின் நோக்கமும் அதுவே.”
மருதுவின் அறிக்கை ஆங்கிலேயர்மீது அவர்கள் இந்தியாவில் ஆட்சி செலுத்தும் முறைமீது மக்களின் ஆழ்மனங்களில் இருப்பதை வெளிப்படையாகக் கூறுகிறது என்று குறிப்பிடும் ஆசிரியர், இந்த அறிக்கை ஆங்கிலேயரின் மிகக் கீழ்த்தரமான பழிவாங்கும் எண்ணத்தை உசுப்பிவிட்டது என்கிறார். அவர் எழுதியதை ஆங்கிலத்திலேயே தருகிறேன்:
Instantly, on receipt of this paper, sedition! Rebellion! was the cry; and the willing mandate was speedily prepared, which consigned the unhappy Mahradu and every male branch of his family to dishonourable grave.
ஆசிரியரின் கூற்றுப்படி எல்லா ஆண்களும் கல்லறைக்குச் சென்றனர் – சிறுவர்களும்கூட.
கோர்லே கூறுகிறார்:
“பாளையக்காரர்மீது போர் அறிவிக்கப்பட்டது. அவரது பாளையத்திற்குத் தீவைத்து அழிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரையும் அவரது குடும்பத்தில் இருந்த ஆண் மக்கள் அனைவரையும் கைதுசெய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.
பிடிபட்ட அனைவரையும் ராணுவக் குழு ஒன்றின் மேற் பார்வையில் விசாரணை ஏதும் இன்றித் தூக்கிலிட ஆணை தரப்பட்டது, நான் கூறுவது வாசகர்களுக்குச் சந்தேகத்தைத் தரலாம். ஆனால் இந்த ஆணைகள் சிறிதுகூட மாற்றமின்றி, காலதாமதமின்றி நிறைவேற்றப்பட்டன.”
மருதுவும் அவரைச் சார்ந்தவர்களும் ஓர் அங்குலம் பரப்பளவைக்கூட விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டனர்.
1801ஆம் ஆண்டு மத்தியில் விதியால் வெல்லப்பட்ட மருதுவும் அவரது குடும்பத்தினரும் சிறைபிடிக்கப்பட்டனர். இரண்டு அல்லது மூன்று பேர்களாக இராணுவ மன்றத்தின்முன் கொணரப்பட்டு உடனே தூக்கிலிடப்பட்டனர். இந்தத் தண்டனையை நிறைவேற்றிய இராணுவக் கேப்டன் தனது நிலைமையை நன்றாக உணர்ந்திருந்தார்.
தான் செய்வது இதுதான் என்று எழுத்து மூலம் மேலிடத்திற்குத் தெரிவித்து எழுத்து மூலம் அனுமதி பெற்ற பிறகே அவர் தனது கடமையைச் செய்தார் என்று கோர்லே சொல்கிறார்.
“எல்லோராலும் மதிக்கப்பட்ட தலைவனுடன், அவனுடைய வயதான அண்ணனும் அழைத்துவரப்பட்டார். “Dummy” என்று அழைக்கப்பட்ட அவர் பிறவியிலேயே ஊமை. (ஆசிரியர் ஊமைத்துரையைக் குறிப்பிடுகிறார். ஊமைத்துரை மருதுவின் உறவினர் அல்ல என்பது ஆசிரியருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை).* இவர்களுடன் மருதுவின் மகன்களும் பேரன்களும் – பத்துப் பன்னிரெண்டு வயதுச் சிறுவர்கள் – தூக்கிலிடப்பட்டனர்.
மருது ராணுவ மன்றத்திடம் தனக்குத் தயை ஏதும் காட்ட வேண்டாம் என்று சொன்னார். ‘நான் என் நாட்டைக் காப்பதற்காகச் சண்டையிட்டுத் தோற்கடிக்கப்பட்டேன். என்னுடைய உயிரைப் பறிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்.
நான் அது பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்தச் சிறுவர்கள்? இவர்கள் என்ன தவறுசெய்தனர்? இவர்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தார்களா? இவர்களைப் பாருங்கள், இவர்களால் ஆயுதம் எடுக்க முடியுமா?’
மருதுவின் இந்தக் கோரிக்கை, மூழ்கும் மாலுமி கடலிடம் முறையிட்டதைப் போலத்தான்!”
எனக்கு “கேட்டனையாயின் வேட்டது செய்ம்மே” என்று முடியும் புறநானூற்று வரிகள் நினைவிற்குவருகின்றன. கோவூர்க்கிழார் மலையமான் மக்களை யானை இடறுவதிலிருந்து காப்பதற்காகப் பாடிய பாடலின் வரிகள். ஆங்கிலேயர்கள் கிள்ளிவளவன் அல்லர். வேட்டதையே செய்தனர்.
கோர்லே கூறுகிறார்:
நான் இந்த நிகழ்வுகளை நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் இவை ஆயிரக்கணக்கான கம்பெனி துருப்புகளின் முன்னிலையில் நிகழ்ந்தவை. அரசரின் 74, 77, 94 ரெஜிமெண்டுகளின் முன்னால் நிகழ்ந்தவை.
நான் இந்த நிகழ்வுகளை உங்கள் முன் கொண்டுவந்ததற்காக எந்தப் பாராட்டையும் கேட்கவில்லை. நீதியின் துணைவராக இருக்கும் – இருந்த – இந்த நாட்டின் கைகளில் இவற்றை ஒப்படைக்க வேண்டிய கடமை எனக்குக் கொடுக்கப்பட்டது. அதை நான் நிறைவேற்றிவிட்டேன்.”
இந்தப் புத்தகத்திற்கு வரவேற்பு எப்படி இருந்தது?
கோர்லேயின் புத்தகத்திலேயே ஒரு வரி இருக்கிறது. “Everything again favours the French Emperor”. 1813ஆம் ஆண்டில் நெப்போலியன் ஐரோப்பா முழுவதையும் ஆண்டுகொண்டிருந்தார். ஆங்கில மக்களின் பார்வை முழுவதும் ஐரோப்பா மீதிருந்தது. நெப்போலியனுக்கு எதிராக அமைத்த கூட்டணி 1813ஆம் ஆண்டு ட்ரெஸ்டனில் நடந்த போரில் படுதோல்வி அடைந்தது.
கூட்டணி 40,000 பேரை இழந்தது. 1805ஆம் ஆண்டிலிருந்து 1815 வரை நடந்த போர்களில் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலைமையில் பத்து, பதினைந்து சிவகங்கைச் சீமைச் சிறுவர்களைப் பற்றி நினைக்க ஆங்கில அரசிற்கோ வாசகர்களுக்கோ நேரம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.
ஆனாலும் இந்தப் புத்தகத்திற்கு ஒரு மதிப்புரை வந்தது. லே ஹண்ட் (Leigh Hunt) என்னும் மிகப் புகழ் பெற்ற கட்டுரையாளர் இந்தப் புத்தகத்திற்குத் தன்னுடைய The Examiner என்னும் பத்திரிகையில் மதிப்புரை எழுதினார். ஹண்ட் தன்மானம் மிக்க பத்திரிகையாளர்.
கீட்ஸ், ஷெல்லி போன்ற கவிஞர்களின் நண்பர். மன்னர் மூன்றாம் ஜார்ஜின் மகன் (பின்னால் நான்காம் ஜார்ஜாகப் பதவி ஏற்றவர்) பற்றி எழுதிய கட்டுரை ஒன்றிற்காக (1813இல் எழுதிய கட்டுரை!) இரண்டு வருடம் சிறை சென்றவர்.
இந்த மதிப்புரையில் (மதிப்புரையின் சில முக்கியமான வரிகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருக்கின்றன) அவர் கூறுவது இது: For if the story is true -which we cannot but doubt until better evidence be adduced -it is one of the most disgraceful and diabolical proceedings that have occurred in the present age.
இது உண்மைக் கதையாக இருந்தால் – உண்மையா என்பது தக்க சான்றுகள் வரும்வரை சந்தேகத்திற்கு உரியது – இது இக்காலத்தின் நடந்த மிக அவமானகரமான, பயங்கரமான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும்.
இந்த அழித்தொழிப்பு நிகழ்ந்ததற்கு வேறு சான்றுகள் இருக்கின்றனவா? நான் அறிந்த அளவில் இதைப் பற்றி எந்த வரலாற்று ஆசிரியரும் குறிப்பிட்டதில்லை என்று எண்ணுகிறேன். நான் அறிந்தது அதிகம் இல்லை. நான் வரலாற்று வல்லுநன் அல்ல.
இவரது கூற்று வெல்ஷ் எழுதியதற்கு மாறாக இருக்கிறது. மருது குடும்பத்தினர் அனைவரையும் அழித்தொழிக்க முடிவு எடுத்திருந்தால், துரைசாமி மட்டும் எவ்வாறு நாடு கடத்தப்பட்டார்? ஒருவேளை அவர் யார் என்பது அடையாளம் கண்டுகொள்ளப்படாததால் அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்.
வெல்ஷ்கூட மேற்கூறியபடி துரைசாமியைத் தூத்துக்குடியில் மற்ற கைதிகளுக்கு மத்தியில் தான் பார்த்ததாகக் குறிப்பிடுகிறார். அவர் இளவரசர் என்பதே மற்றவர்களுக்குத் தெரியவில்லை.
கோர்லேயின் புத்தகத்தில் தகவற் பிழைகள் பல இருக்கின்றன. ஆனால் அதனால் மட்டும் அவர் கூறுவதில் உண்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது. மேலும் கேட்டதையே புத்தகமாக எழுதுவதாக அவரே குறிப்பிடுகிறார். அவருக்கு இந்தப் புத்தகத்தால் ஆதாயம் ஏதும் கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை.
மாறாகத் தன்னுடைய பணத்தைச் செலவழித்துப் புத்தகத்தைப் பதிப்பித்திருக்கிறார். எனவே அவருக்குப் பொய் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. நீதி கிடைக்க வேண்டும் என்ற உந்துதலால் எழுதப்பட்ட புத்தகம் அது என்பது அதைப் படித்தாலே தெரியும்
அழித்தொழிப்பு நடந்திருக்கக்கூடும் என்பதற்கு மறைமுகச் சான்று ஒன்று இருக்கிறது.
1841ஆம் ஆண்டு பிரித்தானிய பார்லிமெண்டின் மேலவை (The House of Lords) பிரிட்டிஷ் காலனிகளில் நடைமுறையில் இருக்கும் (இருந்த) அடிமை முறையைப் பற்றி ஓர் அறிக்கை கொண்டுவந்தது. அந்த அறிக்கையில் 1806ஆம் ஆண்டு Southern Court of Appeal திருச்சிராப் பள்ளி கொடுத்த இரண்டு தீர்ப்புகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது
சிவகங்கை ஜமீன்தார் இரண்டு விதவைகளுக்கு எதிராகத் தொடுத்த வழக்குகளை விசாரித்து முறையீட்டு மன்றம் வழங்கிய தீர்ப்புகள் அவை. சிவகங்கை ஜமீன்தார் உடையத் தேவர் என்று எண்ணுகிறேன். இவர் ஆங்கிலேயருடன் சேர்ந்துகொண்டு மருது சகோதரர்களுக்கு எதிராக இயங்கியதைப் பற்றி வெல்ஷ் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
ஜமீன்தார் பட்டம் விசுவாசத்திற்கு அளிக்கப்பட்ட பரிசு என்பதையும் அவர் சொல்கிறார். அவரது பட்ட மளிப்பு விழாவில், படைத் தளபதி கர்னல் அக்னியூவின் கால்களைக் கட்டிக்கொண்டு கண்ணீர்விட்டு நன்றி தெரிவித்ததையும் வெல்ஷ் குறிப்பிடத் தவறவில்லை.
இந்த விதவைகள் யார்?
முதல் விதவையின் பெயர் மீனம்மாள், சிவஞானம் என்பவரின் மனைவி; மருது சேர்வைக்காரரின் மருமகள். இரண்டாம் விதவையின் பெயர் வீராயி ஆத்தாள். மருது சேர்வைக்காரரின் மனைவி. இவர்கள் இருவருக்கும் சாதகமாக ஜில்லா கோர்ட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துத் தொடங்கப்பட்ட வழக்குகள் இவை.
1801இல் மீனம்மாள் தன்னுடைய நகைகளைத் தன் வேலைக்காரர் அழகு என்பவரிடம் கொடுத்துவைத்திருந்தார். அவரிடமிருந்து நகைகளைச் சிவகங்கை ஜமீன்தார் பறித்துக்கொண்டார். வீராயி ஆத்தாளின் கதை வேறு. அவர் ஒளித்துவைத்திருந்த நகைகளை ஜமீன்தார் கண்டுபிடித்துத் தனதாக்கிக்கொண்டார்.
நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 6,600 நட்சத்திரப் பகோடாக்கள் (1 நட்சத்திரப் பகோடா = சுமார் 4 கம்பெனி ரூபாய்கள் – இன்றைய விலையில் நகைகளின் பெருமானம் பல கோடி ரூபாய்கள் இருக்கும்). ஜமீன்தார் இந்த நகைகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று ஜில்லா நீதிமன்றத்தில் தீர்ப்பாகியிருந்தது. இந்தத் தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்து, முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்புகளின் சுருக்கம் இது:
அரசு அறிக்கை 6 ஜூன் 1801இன்படி மருது சேர்வைக்காரரும் அவரது குடும்பமும் நெல்குடி (சிவகங்கை ஜமீன்தார்) வம்சத்திற்கு அடிமைகள். அடிமைக்குச் சொத்து கிடையாது. அப்படி அடிமை ஏதாவது சொத்துச் சேர்க்க நேர்ந்தால் அந்தச் சொத்து அடிமையின் சொந்தக்காரரைச் சென்றடையும். மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகளாகப் பிறக்கவில்லை.
இருப்பினும் “ஸ்மிருதி சந்திரிகை”யின்படி அடிமைகளின் மனைவிகளும் அடிமைகளாகக் கருதப்படுவர். (1864க்கு முன்னால் நீதிமன்றங்களில் பண்டிதர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்து தர்ம சாத்திரங்கள் என்ன கூறுகின்றன என்பதை நீதிபதிகளுக்கு அவர்கள் தான் அறிவுறுத்தினர்.)
அதனால் மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகள். அவர்களுக்கு நகைகள் போன்ற சொத்துகளை வைத்துக்கொள்ளும் உரிமை கிடையாது. அவர்களது நகைகள் சிவகங்கை ஜமீன்தாருக்குச் சொந்தம்.
இந்தத் தீர்ப்புகள் பல கோணங்களிலிருந்து ஆராயப்பட வேண்டியவை என்பதில் ஐயம் இல்லை. ஆனால் நமக்கு இவற்றிலிருந்து ஒரு சான்று கிடைக்கிறது. இரண்டு விதவைகளுக்கும் ஆண் வாரிசுகள் ஏதும் இல்லை என்பது தீர்ப்பிலிருந்து தெரிகிறது.
ஆண் வாரிசுகள் இருந்திருந்தால் அவர்களைப் பற்றிப் பேசப்பட்டிருக்கும். மருதுவின் குலம் அழித்தொழிக்கப்பட்டது என்பதற்கு இந்தச் சான்று முக்கியமான ஒன்று என நான் எண்ணுகிறேன்.
தேடினால் பல சான்றுகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
மருதுவிற்கு நீதி கேட்க இருநூறு வருடங்களுக்கு முன்னால் ஓர் ஆங்கிலேயர் முன்வந்திருக்கிறார். தமிழர்கள் அனைவரும் அவருக்கு நன்றிசெலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.
பிற்குறிப்பு: இந்தப் புத்தகங்களை எனக்குத் தேடித் தந்தது கூகிள். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பாட்லியன் நூலகமே நமது ஒரு சொடுக்கிற்குக் காத்திருக்கிறது.
மற்றொரு குறிப்பு: Gourlay என்னும் பெயர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பெயர். எனவே அவரை ஆங்கிலேயர் எனச் சொல்வதைவிட ஸ்காட்லாந்தியர் எனச் சொல்வதே சரியாக இருக்கும். இவர்களுக்கும் இங்கிலாந்தியருக்கும் எப்போதுமே உரசல்கள் இருந்திருக்கின்றன. Gourlay என்னும் பெயரை காவ்ர்லே என உச்சரிக்க வேண்டும் எனச் சிலர் சொல்கிறார்கள்.
நமக்கு கோர்லே என்பது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆசிரியர் கோர்லே பற்றி விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. Biographical Dictionary of Living Authors of Great Britain என்னும் புத்தகம் – 1816இல் வந்தது – இவரது பெயரைக் குறிப்பிடுகிறது. ஆனால் இந்தப் புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை.
* பெரிய மருதுவைப் பற்றியும் கோர்லே குறிப்பிடவில்லை,
கட்டுரையை எழுத உதவிய நூற்கள்:
1. Mahradu – An Indian Story of the Beginning of the Nineteenth Century – 1813 London
2. Military Reminiscences – James Welsh 1830 London
3. The Examiner 1813 Collection – Leigh Hunt
4. The Sessional Papers on Slavery Printed by the Order of the House of Lords – 1841, London
நன்றி : இந்த கட்டுரையை வழங்கிய ‘காலச்சுவடு’ இணையதளத்திற்கும் மற்றும் இந்த கட்டுரையை எழுதிய ஆசிரியர் ‘பி.ஏ. கிருஷ்ணன்’ அவர்களுக்கும் எங்களது நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்.

மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம்

இன்றைக்கு நடக்கும் மதக் கலவரங்கள், இனக் கலவரங்களால் மரத்துப் போனவர்களாய் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு மனிதர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கற்காலத்திலிருந்து நாகரிக மனிதனாய் மாறிய பின், மீண்டும் பழைய நிலைக்கே மனிதனின் மனோபாவம் மாறிக் கொண்டிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.
ஒருபுறம் உலக அளவில் சரிவை ஏற்படுத்திவரும் பொருளாதாரப் பிரச்னை. மறுபுறம் பயங்கரவாதம், தீவிரவாதம் என்ற போர்வையில் மனிதனை மனிதனே கூறுபோட்டு சாய்க்கும் அவலம்.

மக்களாட்சித் தத்துவத்தில் மகத்தான நிலையை அடைந்த இந்தியாவில், இன்றைக்கும் மத நல்லிணக்கத்தை உறுதி செய்ய முடியாத நிலை. மதத்தின் பெயரால் அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களில் நிகழ்த்தப்படும் குண்டுவெடிப்புகள். அதில் பலியாகும் ஏராளமான உயிர்கள்.
ஏன் இந்த நிலை?
இருநூறாண்டுகளுக்கு முன்பே, இதற்குத் தீர்வு கண்டுள்ளனர் இரு குறுநில மன்னர்கள். கி.பி. 1780-1801 (சுமார் 20 ஆண்டுகள்) காலகட்டத்தில் சாதி, சமயச் சார்பற்ற, மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடித்த சிவகங்கை சீமை மருது சகோதரர்களின் ஆட்சி வரலாற்றில் தடம் பதித்துள்ளது.
இம் மன்னர்களைப் பற்றிய மற்றொரு சிறப்பும் உண்டு.
சுதந்திர இந்தியாவை ஏற்படுத்துவதற்காக அன்னியர்களை அப்புறப்படுத்த, அனைத்து மதத்தினரையும் ஒன்று திரட்டி முதல் போர்ப் பிரகடனம் அறிவித்த மகா வீரர்கள் அவர்கள்.
அவர்களது ஆட்சியில் விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் நீர்நிலைகள் ஏராளமாக அமைக்கப்பட்டன. மத வேறுபாடுகளைக் கடந்து, சகோதரத்துவத்தை அவர்கள் வளர்த்ததற்கு ஏராளமான சான்றுகள் உண்டு.
தங்களது ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியர்களுக்காக நரிக்குடியில் மசூதியும், திருப்பத்தூரில் கான்பா பள்ளிவாசலையும் கட்டி உள்ளனர். கிறிஸ்தவர்களுக்கு சருகணியில் தேவாலயம், குன்றக்குடி, காளையார்கோவில், திருமோகூர், மானாமதுரை, மதுரை ஆகிய இடங்களில் பெரிய சிவாலயங்களையும், முருகன் கோயிலையும் எழுப்பி திருப்பணி செய்து வழிபாடு நடத்தி ஆட்சி புரிந்தனர்.
மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கமே, வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் துணிவை அவர்களுக்குத் தந்தது.
சின்ன மருதும், பெரிய மருதும் தங்களது படை வலிமையினாலும், தந்திரத்தாலும், வீரத்தினாலும் கும்பினிப் படைகளை கதிகலங்கி ஓடச் செய்தனர்.
பிராமணர்கள், இஸ்லாமியர்கள், சத்திரியர்கள், கிறிஸ்தவர்கள், ஆதி திராவிடர்கள் ஆகியோரை இணைத்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராட, மருது சகோதரர்கள் அறைகூவல் விடுத்தனர்.
கன்னடத்தைச் சேர்ந்த நேதாஜி வாக், மலபாரைச் சேர்ந்த வர்மா, கன்னடத்தின் கிருஷ்ணப்ப நாயக்கர், கோயம்புத்தூரைச் சேர்ந்த கான்-இ-கான், திண்டுக்கல் கோபால் நாயக்கர் போன்ற புரட்சியாளர்களை ஓரணியில் சேர்த்து, வெள்ளையரை இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும் என்று எழுதிக் கையொப்பமிட்டு, திருச்சி கோட்டை வாசலில் அதை ஒட்டி

னர்.
இதைப் படிப்பவர்கள், ஏராளமான பிரதிகள் எடுத்து இச் செய்தியை எங்கும் பரவிடச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாதவர்கள், காராம் பசுவைக் கொன்றதற்குச் சமமாகக் கருதப்படுவர் எனப் பிரகடனப்படுத்தினர். ஆங்கிலேயர்களுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில், அவர்களது சூழ்ச்சியால் மாமன்னர்கள் சிறை பிடிக்கப்பட்டனர்.
கர்னல் அக்னியூ தலைமையில், 1801, அக்டோபர் 24-ம் தேதி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
திருப்பத்தூரில் அவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அரசு நினைவு மண்டபம் கட்டியுள்ளது.
அங்கே, அவர்களது முழு உருவச் சிலைகள் எழுப்பப்பட்டு, வெள்ளையனுக்கு எதிராக முதலில் வாள் சுழற்றியதற்கு மெüன சாட்சியாக அவை நிற்கின்றன.
மத நல்லிணக்கம் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்பது, அறிவியல் வளர்ச்சிபெறாத காலத்திலேயே மருது சகோதரர்களின் எண்ணத்தில் உதித்தது மனிதம் அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்.

வெள்ளைச்சாமித் தேவர் என்ற மதுரகவி பாஸ்கரதாஸ்

ச.முருகபூபதி தொகுத்த “மதுரகவி பாஸ்கர தாஸின் நாட்குறிப்புகள்”
தாத்தா தாஸின் நாட்குறிப்புகளை அவரது பேரன் முருகபூபதி பல ஆண்டுகள் தேடித் தேடி அவற்றைக் கோர்த்து அற்புதமாய் இந்நூலை நமக்குத் தந்துள்ளார். இந்த நாட்குறிப்பு 1.1.1917 லிருந்து துவங்குகிறது. 92 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழக மக்களையும், அவர்களது கலைவாழ்வையும் முழுமையாக 20.9.1951 வரை 34 ஆண்டுகள் பதிவு செய்துள்ளார். இது ஒரு கடிதம், தகவல் இலக்கியமாய், கலைக்களஞ்சியமாய் 719 பெரிய பக்கங்களாக பாரதி புத்தகாலயம் வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. தமிழகத்தின் சமூக, அரசியல், கலை வரலாற்றை, நூறாண்டுகளுக்கு முன்பிருந்த வாழ்க்கையை நாம் நேரில் தரிசிக்க முடிகிறது. அந்த வகையில் இப்பெருநூல் ஒருகலைஞனின் காலப்பெட்டகமாய்த்திகழ்கிறது.

தாஸ் 1892ம் ஆண்டு ஜூன் 6ம்நாள் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் என்ற ஊரில் பிறந்தார். இளவதிலேயே மதுரையில் தனது பாட்டி வீடு சென்று நாடகக் கலைஞராய் மலர்ந்தார். கதரை உடலிலும் காந்தியை உள்ளத்திலும் ஏந்தி கடைசி வரை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாய் நின்றுள்ளார். ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாடல்களை எழுத மேடையில் பாடியதற்காக 29 முறை கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பாடல்களைப் பாடிய விஸ்வநாததாஸ், காதர்பாட்சா போன்ற கலைஞர்களும் அக்காலத்தில் போலீசாரால் மேடையில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒருமேடை நாடக நடிகராக, பெருங்கவிஞராக, நடன, நாட்டிய, பாடல், ஆடல், நாடக நடிப்புப் பயிற்சியாளராக, திரைக்கதை மற்றும் உடையாடல் எழுதுபவராக, கிராமிய நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரிப்பவராக இவர் பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட கலைஞராக வாழ்ந்ததை இந்நாட்குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது. தனக்கு மேடையிலும், தனிப்பட்ட முறையிலும் கிடைக்கும் பணம் மற்றும் பரிசுகள் சககலைஞர்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக வாழ்ந்துள்ளார். சாதி வேறுபாடுகளைப் பாராமல் சக கலைஞர்கள், தலித்துக்கள் வீடுகளில் சாப்பிட்டு, அவர்களுக்கும் தனது வீட்டில் விருந்தளித்திருக்கிறார். தீண்டாமையை எதிர்த்தவராக இருந்துள்ளார்.
வெள்ளைச்சாமி என்ற இவரது இயற்பெயரை ராமனாதபுரம் சேதுபதி இவரைத் தனது அரசவையில் பாடவைத்து “முத்தமிழ் சேத்திர மதுரகவி பாஸ்கரதாஸ்” என்ற பெயரைச் சூட்டினார். இதில் பாஸ்கரன் என்பது பஸ்கர சேதுபதி மன்னரைக் குறிக்கும். இவரது பாடல்கள் பெரும்பாலும் விடுதலைப் போராட்ட வீரர்கள், அவர்களது தியாகங்கள், குறிப்பிடத்தகுந்த நிகழ்ச்சிகள் பற்றியதாகவே எழுதியுள்ளார். பிரிட்டிஷாருக்கு அஞ்சாமல் ஒவ்வொரு பாடலிலும் தனது பெயரையும் பதிவு செய்துள்ளார். மதுரை காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வைத்தியநாதய்யருடன் பேசி மதுரையில் நடிகர்களைத் திரட்டி கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடத்தியுள்ளார் தாஸ். புதுச்சேரி சென்று மூன்று மாத காலம் தலைமறைவு வாழ்க்கையும் நடத்தியுள்ளார்.
தாஸ் தனது காலத்தில் வாழ்ந்த விடுதலைப் போராளிகள் மகாத்மா காந்தி முதல் அனைத்துத் தலைவர்களோடும் தொடர்புடன் இருந்துள்ளார். காந்தியைப் பற்றிப்பாடல் எழுதி அவரிடமே கொடுத்துள்ளார். நாமக்கல் கவிஞர் போன்ற அவர் காலத்திய கவிஞர்களோடும் நெருக்கமாக இருந்துள்ளார். அக்கால நாடகக் கலைஞர்கள் அனைவரோடும் குருபீடத்தில் மதிக்கப்பட்டுள்ளார். எம்.எஸ்.சுப்புலெட்சுமி, கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் போன்ற கலைஞர்கள் இவர் இயற்றிய பாடல்களைப் பாடியுள்ளனர். நடிகர்களுக்கு மனக் குவிப்பு, நடுங்காத தேகம், ஞாபக சக்தி, குரல் வலிமை, உடை பற்றிய ஞானம் பற்றி வகுப்புகள் நடத்தியுள்ளார். அவரது மனக் குவிப்பு இதுவரை கேள்விப்படாத ஒரு சொல்லாகும்.
“ஜட்கா ஓட்டி சின்னுத்தேவன் பீட்டர் குடும்பனின் மகள் ஜெபமேரியைத் திருமணம் பண்ணிவைக்குமாறு அழுது வேண்டினான். அவனுடன் சென்று பீட்டர் குடுமபனின் குடும்பத்தாருடன் பேசி முடித்தேன். பீட்டர் குடும்பனின் பூட்டி என்னை ஆசீர்வசித்து அனுப்பினாள்” என்று தாஸ் தனது நாட்குறிப்பில் எழுதியுள்ளார். சாதிக்குரோதங்கள் மலிந்த அன்றைய சமூகத்தில் இதையெல்லாம் செய்து முடிக்கிற அளவுக்கு செல்வாக்குமிக்கவராய் திகழ்ந்துள்ளார். அதுமட்டுமல்ல, மணப் பெண் ஜெபமேரிக்கு ஒரு தங்கச் சங்கிலியும் பட்டுச்சேலையும் வாங்கிக் கொடுத்துள்ளார். தனக்குக் கிடைக்கும் பணத்தை எல்லாம் வாரி இறைத்திருக்கிறார். பணமில்லாத போது நோட்டு எழுதியும், சொத்தை அடமானம் வைத்தும் கடன் வாங்கிக் கூட பலருக்கு உதவியுள்ளார். நாடகத் துறைப் பணிகளோடு அவர் விவசாயமும் தொடர்ந்து செய்து வந்தது வியப்பாயிருக்கிறது.
தமிழகம் முழுவதும் சுற்றிய இவர் கொழும்பு யாழ்ப்பாணம் முதல் ஆலப்புழை வரை சென்று நாடகங்கள் நடத்தியுள்ளார். பின்னாளில் கம்யூனிஸ்ட்டுத் தலைவரான கே.பி.ஜானகியம்மாள் ஸ்திரீபார்ட் நடிகையாக ஏராளமான நாடகங்களில் நடத்துள்ளார். அவரது இளவயது புகைப்படமும் இந்நூலில் வந்துள்ளது. 1929ம் ஆண்டில் தங்கம் பவுன் ரூ.13க்கு கிடைத்துள்ளது. தாஸ் மதுரை அமெரிக்கன்கல்லூரி மாணவர்கள், மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே நாடகப் பயிற்சியளித்துள்ளார். அவர் எழுதிய பாடல்களில் பனங்காட்டுப் பாடல்கள், சேவல் கட்டுப்பாடல், வன்னிமரப்பாடல்கள் வரை உள்ளன. 1931ல் ஒரு சந்தன சோப் விலை 4 அணா தான். அவர் தனது நாட்குறிப்பில் அன்றாட வரவு – செலவுகளையும் தவறாது எழுதியிருப்பதால் அக்கால விலைவாசி நிலைமைகளை நம்மால் புரிய முடிகிறது.
1938ல் மதுரையில் பேய் பொம்மை என்ற ஆங்கிலப்படத்தை தாஸ் பார்த்துள்ளார். சினிமா காட்சியின் போது பயந்து ஓடியசிலருக்கு தியேட்டர்காரர்கள் பாலும் பழமும் கொடுத்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். வயக்காட்டில் நின்ற மயில் கூட்டத்தில் காலில் காயம் ஏற்பட்ட ஆண் மயிலுக்கு மருந்திடச் சொல்லியிருக்கிறார் தாஸ். அவரது இறுதி நாட்களில் நாட்குறிப்பு பெரும்பாலும் நாகலாபுரத்திலேயே நிலைத்து விடுகிறது. நோயும் ஊசி மருந்துகளுமாய் குறிப்புகள் உள்ளன. ஆனால், பாடல்கள் எழுதுவது, பாடுவது மட்டும் குறையவே இல்லை. பலவிதமான மனிதர்கள், வினோதங்களைப் படித்தறிய முடிகிறது. கொடுத்தவன் ஏகாலியானாலும் அவனளித்த கொக்குக் கறியும் குதிரை வாலிச் சோறும் தாஸுக்கு இனிக்கிறது.
சினிமா சகாப்தம் தமிழகத்தில் 1931ல் துவங்குகிறது. தாஸ் திரைப்படங்களுக்கு வசனம் பாடல்களை எழுதியுள்ளார். காளிதாஸ், வள்ளிதிருமணம், பிரகலாதா, சுலோசனாசதி, திரௌபதி, வஸ்திராசுரன், ராதாகிருஷ்ணன், சதி அகல்யா, சாரங்கதாரா, ராஜா தேசிங், ராஜசேகரன், போஜராஜன், உஷா கல்யாணம், சித்திரஹாசன், ராதாகல்யாணம் போன்ற படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார்.
விடுதலைப் போராளிகள் போராட்டங்களை நடத்திச் சிறை சென்ற காலத்தில் தாஸ் தனது நாடகங்கள், பாடல்கள் மூலம் மக்களுக்குத் தேசபக்தியூட்டியுள்ளார். விடுதலைப் போரில் மக்கள் உற்சாகமுடன் பங்கேற்க அவரது பாடல்கள் உதவியுள்ளன. 75 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக மக்களின் வாழ்க்கை, வளமைகள், நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள், நாதஸ்வரக் கலைஞர்கள், தலைவர்கள் என அனைவரையும் இந்த நாட்குறிப்பில் ஒரு சேர தரிசிக்கலாம். ஒப்பற்ற கலைஞனாக இருந்தும் எளிய மனிதர்களை நேசிக்கும் எளிய மனிதராகவே வாழ்ந்திருக்கிறார். இதை ஊன்றிப் படித்தால் ருசிகரமான தகவல்களும், ஆய்வாளர்களுக்கான விபரங்களும் கிடைக்கும். இம்மாபெரும் கலைஞர் 20.12.1952ல் நாகலாபுரத்தில் காலமானார்.
மதுரகவி பாஸ்கரதாஸின் மகள் சரஸ்வதியை மணந்த மருமகன் திரு.சண்முகம், ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அவரது புதல்வர்கள் தமிழ்ச்செல்வன், கோணங்கி, முருகபூபதி மூவருமே படைப்பாளிகள். மற்றொரு சகோதரர் பாலசுப்பிரமணியன் இவர்களுக்கு எல்லா வகையிலும் துணை நின்று வருகிறார். மதுரகவியின் பாரம்பரியத்தையும் சாதனைகளையும் இந்த நாட்குறிப்புகளில் நயம்படக் காண்கிறோம். மிகுந்த சிரமப்பட்டு இந்த நாட்குறிப்புகளை அவரது பேரன் ச.முருகபூபதி தொகுத்துள்ளார். இதே போன்று அவரது பாடல்களையும் தொகுப்பதோடு அவற்றை விசிடிகளில் பதிவு செய்து வெளியிட்டால் பெரும் சாதனையாய் நிலைத்து நிற்கும். இந்நூலை பாரதி புத்தகாலயம் சிறந்த முறையில் அச்சிட்டு வெளியிட்டுள்ளது.
அப்போது தேவர்கள் மாநாடு ஒன்று கூட்டியிருக்கிறார்கள். அந்த மாநாட்டிற்கு மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்களையும் முதுகுளத்தூர் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை-யும் கூப்பிட்டார்களாம். இருவருமே ஒரு ஜாதியின் பெயரால் கூட்டப்படும் மாநாட்டிற்கு வரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்களாம். மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்கள் மிகப் பெரிய இந்துஅபிமானி என்பது தெரிய வருகிறது. ஆனால், அவர் எல்லா ஜாதிக்காரர்-களோடும் மதத்தினரோடும் நல்லுறவு கொண்டு அற்புத மனிதராகத் தெரியவருகின்றார் அவருடைய நாட்குறிப்பின் மூலம்….
நாடகத்தில் தீவிர ஈடுபாடுகொண்ட வெள்ளைச்சாமித் தேவரென்ற பாஸ்கரதாஸ் 1925இல் இந்து தேசாபிமானிகள் செந்தமிழ் திலகம் என்னும் பாடல் நூலை வெளியிட்டார். இவரது பாடல்கள் சாதாரண வர்ண மெட்டுகளுடன் எளிதாகப் பாடக்கூடியவையாயிருந்ததால் மக்களிடையே பெரும் வரவேற்புப் பெற்றன. இவரது பல நாடக மேடைப் பாட்டுகளும் தனிப் பாடல்களும் பிராட்காஸ்ட் கம்பெனியின் கிராம்ஃபோன் தட்டுகளாக வெளிவந்தன. அதிலும் ‘வந்தே மாதரமே, நம் வாழ்விற்கோர் ஆதாரமே’ என்னும் பாட்டு மக்களிடையே மிகப் பிரபலமடைந்தது. இவரது பாடல்களைப் பாடாத கலைஞரே இல்லை….

மதுரையில் நாற்பதுகளில் இயங்கிய சித்ரகலா என்ற ஸ்டுடியோவுடன் பாஸ்கரதாஸ் கொண்டிருந்த தொடர்பு பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது. நடிகர்களின் அமைப்பிற்கெல்லாம் முன்னோடியாய் அமைந்த மதுரை நடிகர் சங்கத்தை 1926இல் தோற்றுவித்தவர் பாஸ்கரதாஸ்….
ஈ. வே. ரா, இ. மா. பாலகிருஷ்ண கோன், அரியக்குடி ராமானுஜம் அய்யங்கார், எம். எஸ். விஜயாள், முத்துராமலிங்கத் தேவர், தண்டபாணி தேசிகர் எனப் பல தமிழ்நாட்டு வரலாற்று நாயகர்களுடன் தொடர்புகொண்டிருந்தார். எம். எஸ். சுப்புலட்சுமிக்கு பாஸ்கரதாஸ் பாட்டுகள் எழுதித் தந்திருக்கின்றார்….
நன்றி :மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள்.
புத்தக விலை ரூ.400
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,
சென்னை – 18.